ரயில்வே நிர்வாகம் தட்கல் டிக்கெட் முன்பதிவில் முறைகேடுகளைத் தடுக்கவும், உண்மையான பயணிகளுக்கு டிக்கெட் கிடைப்பதை உறுதி செய்யவும் IRCTC புதிய தட்கல் விதிகளை அதிரடியாக அமல்படுத்தியுள்ளது.
ரயிலில் அவசரமாக பயணம் செய்யும் பயணிகளுக்கு முக்கிய அறிவிப்பு வெளியாகியுள்ளது. தட்கல் டிக்கெட் முன்பதிவு முறையில் இந்திய ரயில்வே மற்றும் IRCTC புதிய மாற்றங்களை அறிமுகப்படுத்தியுள்ளன. இந்த நடவடிக்கை, டிக்கெட் முன்பதிவை மேலும் பாதுகாப்பானதாகவும் வெளிப்படையானதாகவும் மாற்றும் நோக்கத்துடன் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

நீண்ட தூர பயணங்களுக்காக ரயிலை நம்பும் லட்சக்கணக்கான பயணிகள், முன்பதிவு டிக்கெட்டுகள் கிடைக்காத சூழலில் தட்கல் சேவையை பயன்படுத்துகின்றனர். ஆனால், தட்கல் முன்பதிவு தொடங்கிய சில நொடிகளிலேயே இருக்கைகள் நிரம்பிவிடுவதால், பலருக்கு டிக்கெட் கிடைப்பதில் சிரமம் ஏற்பட்டு வருகிறது. இந்த பிரச்சினைக்கு தீர்வு காணும் வகையில், ரயில்வே புதிய விதிமுறைகளை அறிமுகப்படுத்தியுள்ளது. இனி தட்கல் டிக்கெட் முன்பதிவு செய்ய IRCTC கணக்கு மட்டும் இருந்தால் போதாது. பயணிகள் தங்களது கணக்கை ஆதாருடன் இணைத்திருக்க வேண்டும்.
புதிய விதிகளின்படி, தட்கல் டிக்கெட் முன்பதிவு செய்யும் போது ஆதார் எண்ணுடன் இணைக்கப்பட்ட மொபைல் எண்ணுக்கு OTP அனுப்பப்படும். அந்த OTP-ஐ சரியாக பதிவு செய்த பின்னரே முன்பதிவு செயல்முறை தொடரும். இந்த நடைமுறை மூலம் போலி அடையாளங்களை பயன்படுத்தி டிக்கெட்டுகளை முன்பதிவு செய்வது குறையும் என ரயில்வே நம்புகிறது. குறிப்பாக, ஒரே நபர் பல்வேறு போலி கணக்குகள் மூலம் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்வதைத் தடுக்க இது உதவும். இதன் மூலம் உண்மையான பயணிகளுக்கு தட்கல் டிக்கெட் கிடைக்கும் வாய்ப்பு அதிகரிக்கும். எனவே, தட்கல் டிக்கெட் முன்பதிவு செய்ய விரும்பும் பயணிகள் தங்களது IRCTC கணக்கை ஆதாருடன் இணைத்திருப்பதையும், ஆதாருடன் மொபைல் எண் இணைக்கப்பட்டிருப்பதையும் உறுதி செய்து கொள்ள வேண்டும்.
“30 நிமிட உரையில் 10 ரீல்ஸ் எடுக்கலாம்” – முதல்வர் விஜயை விமர்சித்த உதயநிதி ஸ்டாலின்
