Homeசெய்திகள்தமிழ்நாடு"பேப்பர் படிச்சா மட்டும் போதாது": சட்டப்பேரவையில் உதயநிதி - முதல்வர் விஜய்க்கு இடையே காரசார விவாதம்!

“பேப்பர் படிச்சா மட்டும் போதாது”: சட்டப்பேரவையில் உதயநிதி – முதல்வர் விஜய்க்கு இடையே காரசார விவாதம்!

-

- Advertisement -

​​தமிழக சட்டப்பேரவையில் நேற்று நடைபெற்ற விவாதத்தின்போது, குறுவை சாகுபடி நிவாரணம் மற்றும் வறட்சி நிவாரணம் தொடர்பாக ஆளுங்கட்சிக்கும் எதிர்க்கட்சிக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. முன்னதாக, குறுவை சாகுபடி நிவாரணத் தொகை ஏற்கனவே வழங்கப்பட்டுவிட்டதாகக் கூறிய உதயநிதி, எதிர்க்கட்சியினரை மறைமுகமாக விமர்சித்தார்."பேப்பர் படிச்சா மட்டும் போதாது": சட்டப்பேரவையில் உதயநிதி - முதல்வர் விஜய்க்கு இடையே காரசார விவாதம்!​”கொஞ்சம் பேப்பர் படிங்க”: உதயநிதி விமர்சனம்-​சட்டப்பேரவையில் குறுவை சாகுபடி நிவாரணம் குறித்த கேள்விக்குப் பதிலளித்த உதயநிதி, “இந்த நிவாரணத் தொகை ஏற்கனவே வழங்கப்பட்டுவிட்டது. அரசியலில் தாங்கள்தான் எல்லாம் என்று சொல்லிக்கொள்பவர்களுக்கு இது கூடவா தெரியவில்லை? தினமும் பேப்பர் படிக்கும் பழக்கம் இருந்தால் நாட்டிலும், அரசு என்னென்ன திட்டங்களைச் செய்கிறது என்பதிலும் என்ன நடக்கிறது என்பது தெரிந்திருக்கும்” என்று காட்டமாக விமர்சித்தார்.

எதிர்க்கட்சித் தலைவர் பதிலடி – ​இதற்கு உடனே பதிலளித்த எதிர்க்கட்சித் தலைவர், ஸ்பெஷல் பேக்கேஜ் என்ற பெயரில் நீங்கள் கொடுத்த 134 கோடி ரூபாய் என்பது எல்லா அரசுகளும் வழக்கமாகத் தருவதுதான். நாங்கள் கேட்பது வறட்சி நிவாரண நிதி. இந்த இரண்டிற்கும் உள்ள வித்தியாசத்தைப் புரிந்துகொள்ள வேண்டும். தினமும் காலையில் செய்தித்தாள் படிப்பதோடு நின்றுவிடாமல், அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்டி, விவசாயிகளின் கோரிக்கைகளை நேரடியாகக் கேட்டுச் செயல்படுங்கள்” என்று பதிலடி கொடுத்தார்.

we-r-hiring

​மீண்டும் எழுந்த அனைத்துக் கட்சி கூட்டக் கோரிக்கை ​தொடர்ந்து பேசிய எதிர்க்கட்சித் தலைவர், “கர்நாடகாவில் காவிரி விவகாரம் குறித்து முன்னாள் முதல்வர்கள் மற்றும் அனைத்துக் கட்சித் தலைவர்களை அழைத்து ஆலோசனைகளை நடத்தி வருகின்றனர். ஆனால், நமது அரசு ஏன் அனைத்துக் கட்சி கூட்டத்தைக் கூட்டத் தயங்குகிறது? என்ன பயம் உங்களுக்கு?” என்று கேள்வி எழுப்பினார்.

​மேலும், குறுவை சாகுபடி மற்றும் சம்பா சாகுபடி பாதிப்புகளால் டெல்டா மாவட்ட விவசாயிகள் பெரும் துயரத்தில் இருப்பதைச் சுட்டிக்காட்டிய அவர், டெல்டா மாவட்டங்களை வறட்சி பாதித்த மாவட்டங்களாக அறிவித்து, உரிய நிவாரணங்களை வழங்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.

​சட்டப்பேரவையில் ஆளுங்கட்சி மற்றும் எதிர்க்கட்சி உறுப்பினர்களுக்கு இடையே நிகழ்ந்த இந்த மோதல், பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

காவிரி இணைப்புத் திட்டம்: சரியான நேரத்தில் ரஜினி நிதி வழங்குவார் – லதா ரஜினிகாந்த் பேட்டி!

MUST READ