நடிகர் யஷ் நடிப்பில், இயக்குநர் கீது மோகன்தாஸ் இயக்கியுள்ள ‘டாக்ஸிக்’ (Toxic) திரைப்படத்தின் ஹீரோயின்ஸ் டீசர் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.


நயன்தாரா, கியாரா அத்வானி, ருக்மிணி வசந்த், ஹூமா குரேஷி உள்ளிட்ட ஐந்து கதாநாயகிகள் இடம்பெறும் இந்த டீசர், தொடக்கத்திலேயே Disclaimer மூலம் எச்சரிக்கை விடுத்து, முழுக்க முழுக்க ‘A’ சான்றிதழுக்கேற்ற வன்முறை மற்றும் மாஸ் காட்சிகளுடன் உருவாக்கப்பட்டுள்ளது. முன்னதாக வெளியான முதல் டீசரில், ‘ராயா’ என்ற கதாபாத்திரத்தில் யஷ் அதிரடி ஆக்ஷன் காட்சிகளில் மிரட்டியிருந்தார். டீசரின் இறுதியில் அவர் பேசும் “I am home, Daddy!” என்ற வசனம் சமூக வலைதளங்களில் வைரலானது. கேஜிஎஃப் படங்களுக்குப் பிறகு யஷ் நடித்துள்ள இந்தப் படம் மீது ரசிகர்களிடம் பெரும் எதிர்பார்ப்பு நிலவுகிறது. தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம், மலையாளம் மற்றும் ஆங்கிலம் உள்ளிட்ட பல மொழிகளில் உருவாகியுள்ள ‘டாக்ஸிக்’ திரைப்படம் வரும் ஆகஸ்ட் 28-ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாக உள்ளது.
