Homeசெய்திகள்அரசியல்அரிசி விலை உயர்வைக் கட்டுப்படுத்த அரசு என்ன செய்தது? – ஈ.ஆர்.ஈஸ்வரன் கேள்வி

அரிசி விலை உயர்வைக் கட்டுப்படுத்த அரசு என்ன செய்தது? – ஈ.ஆர்.ஈஸ்வரன் கேள்வி

-

- Advertisement -

தமிழ்நாட்டில் ஏழை மற்றும் நடுத்தர மக்களைக் கடுமையாகப் பாதித்துள்ள அரிசி விலை உயர்வைக் கட்டுப்படுத்த தமிழக அரசு இதுவரை என்ன நடவடிக்கை எடுத்துள்ளது என்று கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் (கொமதேக) பொதுச்செயலாளரும், முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான ஈ.ஆர்.ஈஸ்வரன் கேள்வி எழுப்பியுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
ஈ.ஆர்.ஈஸ்வரன்

அதிர்ச்சியைத் தரும் அரிசி விலை உயர்வு
தமிழகத்தில் அரிசி விலை கிலோவுக்கு 5 ரூபாய் முதல் 10 ரூபாய் வரை அதிகரித்துள்ளது. குறிப்பாக, சீரகசம்பா அரிசி கிலோ 96 ரூபாய் வரை விற்கப்பட்டு வருவது ஏழை மற்றும் நடுத்தர வர்க்கத்தினரை பெரும் கவலையில் ஆழ்த்தியுள்ளது. ஆந்திரா மற்றும் தெலுங்கானாவில் கடந்த ஆண்டு பருவமழை பொய்த்ததால் சாகுபடி குறைந்துள்ளது. தமிழகத்திலும் கர்நாடக அரசு உரிய தண்ணீர் திறந்து விடாததால், குருவை சாகுபடி பாதிக்கப்பட்டு நெல் விளைச்சல் கடுமையாக வீழ்ச்சியடைந்துள்ளது. நெல் பற்றாக்குறை காரணமாக வரும் காலங்களில் அரிசி விலை மேலும் உயர வாய்ப்புள்ளது. இதுதவிர, டீசல் விலை உயர்வால் லாரி வாடகை அதிகரித்திருப்பதும் இந்த விலை உயர்வுக்கு முக்கியக் காரணமாகும்.

we-r-hiring

​அரசின் அலட்சியம் ஏன்?
மக்களைப் பாதிக்கும் இந்த விலை உயர்வை உணர்ந்து தமிழக அரசு இதுவரை என்ன நடவடிக்கை எடுத்துள்ளது? இது சம்பந்தமாகத் துறை சார்ந்த அமைச்சர் மற்றும் அதிகாரிகளை வைத்து, அரிசி விலையைக் கட்டுப்படுத்துவது குறித்து இதுவரை ஏன் எந்தவொரு ஆலோசனைக் கூட்டமும் நடத்தப்படவில்லை?

மாற்றுக் கட்சி நிர்வாகிகளைத் தங்கள் கட்சியில் சேர்ப்பதில் காட்டும் அக்கறையை, ஆளும் அரசு ஏழை, எளிய மக்களின் அன்றாடப் பிரச்சினைகள் மீதும் காட்ட வேண்டும். எனவே, இந்த நிலையை உன்னிப்பாகக் கவனித்து, அரிசி விலையேற்றத்தை உடனடியாகக் கட்டுப்படுத்த அரசு போர்க்கால நடவடிக்கை எடுக்க வேண்டும்.

MUST READ