Homeசெய்திகள்தமிழ்நாடு"தோல்வியால் நான் துவண்டுவிடவில்லை; 75 ஆண்டுகளைக் கடந்த கம்பீரம் நமக்கிருக்கிறது!" – தொண்டர்களுக்கு மு.க.ஸ்டாலின் உருக்கமான...

“தோல்வியால் நான் துவண்டுவிடவில்லை; 75 ஆண்டுகளைக் கடந்த கம்பீரம் நமக்கிருக்கிறது!” – தொண்டர்களுக்கு மு.க.ஸ்டாலின் உருக்கமான மடல்!

-

- Advertisement -

“தேர்தல் தோல்வியால் நான் துவண்டுவிடவில்லை; திமுகவை மீண்டும் புதிய பாதையில் வழிநடத்த உங்களின் உணர்வுகளே எனக்கு வலிமை தருகின்றன” என்று திமுக தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் தனது கட்சித் தொண்டர்களுக்கு உருக்கமான மடல் ஒன்றை எழுதியுள்ளார்.தோல்வியால் நான் துவண்டுவிடவில்லை; 75 ஆண்டுகளைக் கடந்த கம்பீரம் நமக்கிருக்கிறது!" – தொண்டர்களுக்கு மு.க.ஸ்டாலின் உருக்கமான மடல்!​தான் வெளிநாடு புறப்படுவதற்கு முன்பாக, ‘உங்களில் ஒருவன்’ என்ற தலைப்பில் தொண்டர்களுக்கு அவர் எழுதியுள்ள கடிதத்தின் விரிவான விபரம் வருமாறு,

​”தோல்வியைத் தலையில் ஏற்றியதில்லை”
​”தேர்தல் தோல்வியால் நான் துவண்டுவிடவில்லை என்றாலும், சோர்வு நம்மை அண்டாமல் பார்த்துக் கொள்ள வேண்டிய தலைமைப் பொறுப்பு எனக்கு உள்ளது. அதனால்தான், தேர்தல் முடிவுகளுக்குப் பின் நாள்தோறும் அண்ணா அறிவாலயத்திற்கு வரத் தொடங்கினேன். அங்கு வரும் குழந்தைகள், மாணவர்கள், இளைஞர்கள், பெண்கள், முதியோர் என நூற்றுக்கணக்கான உடன்பிறப்புகள் என்னிடம் சொல்வது ஒன்றே ஒன்றுதான்; ‘நாங்க இருக்கோம்… நாம மீண்டும் வருவோம்!’.

we-r-hiring

​இந்தச் சொற்கள் எதிரிகளை ஒருசேர வீழ்த்தும் வலிமையை எனக்குக் கொடுக்கின்றன. வரலாற்றைத் திரும்பிப் பார்த்தால், நம்மைப் போல் வெற்றி பெற்றவர்களும் இல்லை; தோல்வியைக் கண்டவர்களும் இல்லை. வெற்றியை நாம் தலையில் ஏற்றிக்கொண்டதுமில்லை; தோல்வியை இதயத்தில் தாங்கிக்கொண்டதுமில்லை. அதனால்தான் ஃபீனிக்ஸ் பறவையென நம்மால் மீண்டும் மீண்டெழ முடிகிறது. இன்று நாட்டில் நடக்கும் காட்சிகளைப் பார்த்தால், ஒரு சில இயக்கங்களால் ஒரு தோல்வியைக்கூடத் தாங்கிக் கொள்ள முடியவில்லை. ஆனால் நாம், ஆல் போல் வேரூன்றி வளர்ந்து நிற்கின்றோம்.தோல்வியால் நான் துவண்டுவிடவில்லை; 75 ஆண்டுகளைக் கடந்த கம்பீரம் நமக்கிருக்கிறது!" – தொண்டர்களுக்கு மு.க.ஸ்டாலின் உருக்கமான மடல்!​மறுசீரமைப்பு ஆலோசனைக் குழு அமைப்பு
​நம் இயக்கம் அடுத்த நூறாண்டுகளுக்குப் பயணிக்க வேண்டிய திசையைத் தீர்மானிக்க வேண்டியது தலைமைத் தொண்டனான என் கடமை. அதனால்தான், 38 பேர் கொண்ட 19 குழுக்களை அமைத்து, ஒவ்வொரு தொகுதிக்கும் அனுப்பி உங்களின் உள்ளங்களை அறிந்து வரச் சொன்னேன். மேலும், உங்களின் நேரிடையான கருத்துக்களைப் பெற ‘உடன்பிறப்பின் குரல்’ என்ற இணையதளத்தையும் உருவாக்கினோம். ​உடன்பிறப்புகள் உரிமையோடும், அக்கறையோடும் சொன்ன கருத்துக்களின் அடிப்படையில், கழகத்தின் மறுசீரமைப்பிற்காக – மறுகட்டுமானத்திற்காக, இளமையும் அனுபவமும் கலந்த *’மறுசீரமைப்பு ஆலோசனைக் குழு’*வை இப்போது அமைத்திருக்கிறேன்.

​இந்தக் குழு, கழக மாவட்டங்களில் மேற்கொள்ள வேண்டிய மறுவரையறை, கழகத்தின் சார்பு அணிகளின் மறுசீரமைப்பு, தேர்தல் பணிக்குழு உள்ளிட்ட பல்வேறு குழுக்களில் மேற்கொள்ள வேண்டிய சீரமைப்புகள், கிளை முதல் தலைமை வரை செய்யப்பட வேண்டிய மறுசீரமைப்பு குறித்த பரிந்துரைகளை என்னிடம் வழங்கும்.

​”இந்தியாவிலேயே பலம் பொருந்திய அமைப்பு”
​திமுகவைப்போல் அமைப்புரீதியான பலம்கொண்ட வேறு எந்தக் கட்சியும் இந்தியாவிலேயே கிடையாது என்பதைப் பிற மாநிலத் தலைவர்களும், அரசியல் நோக்கர்களும் ஒப்புக்கொண்டுள்ளனர். அத்தகைய பலம் பொருந்திய அமைப்பு மீண்டும் எழும்போது மலையென நிற்க வேண்டும். அடுத்த ஒரு நூற்றாண்டுக்கான நமது வரலாற்றையும், தமிழ்நாட்டின் புது வரலாற்றையும் நாம் ஒருசேர எழுத வேண்டும்.

​அயலகப் பயணம்
​இந்த மறுசீரமைப்புப் பணிகளை எல்லாம் உரிய குழுக்களிடம் ஒப்படைத்துள்ள நிலையில்தான், நான் இன்று இருவார கால அயலகப் பயணம் (வெளிநாட்டுப் பயணம்) மேற்கொள்ளவுள்ளேன். நான் இருவாரங்கள் அயலகத்தில் இருந்தாலும், எனது மனம் அண்ணா அறிவாலயத்தில்தான் இருக்கும்; அங்கு நாள்தோறும் வரும் உங்கள் முகங்கள்தான் என் நெஞ்சில் நிழலாடும்” என்று மு.க.ஸ்டாலின் தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

நள்ளிரவு 12 மணி வரை நீண்ட பரபரப்பு விசாரணை: முன்னாள் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனுக்கு நிபந்தனை ஜாமீன் – போலீஸ் கோரிக்கை நிராகரிப்பு!

MUST READ