Homeசெய்திகள்சினிமாமிரட்டலான ஃபேண்டஸி த்ரில்லர்.. ஃபகத் ஃபாசிலின் 'Don't Trouble The Trouble' டீசர் அவுட்!

மிரட்டலான ஃபேண்டஸி த்ரில்லர்.. ஃபகத் ஃபாசிலின் ‘Don’t Trouble The Trouble’ டீசர் அவுட்!

-

- Advertisement -

தமிழ் மற்றும் மலையாளத் திரையுலகில் தனது அசாத்திய நடிப்பால் முத்திரை பதித்து வரும் நடிகர் ஃபகத் ஃபாசில் நடிப்பில் உருவாகியுள்ள ‘Don’t Trouble The Trouble’ திரைப்படத்தின் டீசர் நேற்று அதிகாரப்பூர்வமாக வெளியானது. ஃபேண்டஸி கலந்த அதிரடி த்ரில்லர் பாணியில் உருவாகியுள்ள இத்திரைப்படத்தின் டீசர், வெளியான சில மணி நேரங்களிலேயே இணையத்தில் பெரும் வரவேற்பைப் பெற்று வைரலாகி வருகிறது.மிரட்டலான ஃபேண்டஸி த்ரில்லர்.. ஃபகத் ஃபாசிலின் 'Don't Trouble The Trouble' டீசர் அவுட்!

பிரபல இயக்குநர் ஷஷாங் எலேட்டி இயக்கியுள்ள இத்திரைப்படத்தில், ஃபகத் ஃபாசிலுடன் இணைந்து ‘தெய்வத்திருமகள்’ புகழ் குழந்தை நட்சத்திரம் சாரா (பேபி சாரா) முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். தற்போது வெளியாகியுள்ள டீசரில் இடம்பெற்றுள்ள மாயாஜாலக் காட்சிகள், உலகப் புகழ்பெற்ற ‘அலாவுதீனும் அற்புத விளக்கும்’ கதையின் நவீனப் பின்னணியை ஒத்திருப்பதாகச் சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. விசித்திரமான ஒரு மாய விளக்கைக் கண்டெடுக்கும் சிறுமியும், அவளுக்குத் துணையாக வரும் ஃபகத் ஃபாசிலும் சந்திக்கும் சவால்களே படத்தின் மையக்கதையாக இருக்கும் என்பதை டீசர் உணர்த்துகிறது. இதில் ஃபகத் ஃபாசிலின் எக்ஸ்பிரஷன்களும், சாராவுடன் அவர் இணைந்து வரும் காட்சிகளும், மிரட்டலான பின்னணி இசையும் படத்தின் மீதான எதிர்பார்ப்பை இருமடங்காக்கியுள்ளது. இத்திரைப்படம் குறித்த அடுத்தடுத்த அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படும் நிலையில், சினிமா ஆர்வலர்கள் மற்றும் ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் இந்த டீசரைக் கொண்டாடி வருகின்றனர்.

லண்டனிலிருந்து பாடலால் அஞ்சலி செலுத்திய இளையராஜா இசைக்குழுவினர்: கங்கை அமரன் உருக்கமான இரங்கல்!

we-r-hiring

MUST READ