Homeசெய்திகள்இந்தியாடெல்லியில் முற்றும் 'காக்ரோச்' மாணவர்கள் போராட்டம்: மத்திய அரசுக்கு நெருக்கடி – நேபாளம், இலங்கை பாணி...

டெல்லியில் முற்றும் ‘காக்ரோச்’ மாணவர்கள் போராட்டம்: மத்திய அரசுக்கு நெருக்கடி – நேபாளம், இலங்கை பாணி ஆட்சி மாற்றப் பதற்றம்!

-

- Advertisement -

மத்திய அரசு மற்றும் கல்வித் துறையின் செயல்பாடுகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து, டெல்லியின் மையப் பகுதிகளான ஜந்தர் மந்தர் மற்றும் பாலிகா பஜார் உள்ளிட்ட இடங்களில் ஆயிரக்கணக்கான மாணவர்களும் இளைஞர்களும் திரண்டு நடத்தி வரும் தீவிரப் போராட்டம் தேசிய அளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

காக்ரோச்

we-r-hiring

நாட்டின் பல்வேறு மாநிலங்களில் இருந்தும் குவியும் மாணவர்கள்

ஆரம்பத்தில் டெல்லிப் பகுதிகளில் மட்டுமே காணப்பட்ட இப்போராட்டம், தற்போது நாட்டின் பல்வேறு பகுதிகளுக்கும் பரவியுள்ளது. ராஜஸ்தான், பஞ்சாப், உத்தரப்பிரதேசம் (நொய்டா) மற்றும் மத்தியப் பிரதேசம் ஆகிய மாநிலங்களில் இருந்து பெருந்திரளான மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் டெல்லியை நோக்கி ஊடுருவி கூட்டமாகத் திரண்டு வருவதால் தலைநகரில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

‘காக்ரோச் ஜனதா பார்ட்டி’ இயக்கத்தின் பின்னணியும் முதன்மை கோரிக்கைகளும்

இப்போராட்டம் ஆரம்பத்தில் மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும் என்ற கோரிக்கையுடன் தொடங்கியது. இருப்பினும், இதன் முதன்மை நோக்கம் கல்வித் துறை மற்றும் நீதித்துறையில் முழுமையான தூய்மையையும் சீர்திருத்தத்தையும் கொண்டு வருவதுதான் எனக் கூறப்படுகிறது. அபிஜித் தீப்கே தலைமையில் இயங்கும் ‘காக்ரோச் ஜனதா பார்ட்டி’ (Cockroach Janata Party) அமைப்பினர் இப்போராட்டத்திற்குத் தலைமை தாங்கி, பேச்சுவார்த்தை நிலைகளிலும் முன்னணியில் செயல்பட்டு வருகின்றனர்.

இடதுசாரிகள் பங்கேற்பு & எதிர்க்கட்சிகளின் நிலைப்பாடு

இப்போராட்டத்தில் SFI உள்ளிட்ட முன்னணி இடதுசாரி மாணவர் அமைப்புகளும் இணைந்து களமிறங்கியுள்ளன. அதேவேளையில், காங்கிரஸால் தனியாக இவ்வளவு பெரிய அளவிலான கூட்டத்தைத் திரட்ட முடியாது என்றும், நலிவடைந்துள்ள காங்கிரஸ் கட்சிக்கும் ராகுல் காந்திக்கும் தற்போதைய ஆட்சிக்கு எதிராகத் தங்களை மீண்டும் வலுப்படுத்திக்கொள்ள இப்போராட்டம் ஒரு முக்கிய அரசியல் வாய்ப்பாக மாறியுள்ளதாகவும் விமர்சகர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.

இலங்கை, நேபாள பாணி மக்கள் எழுச்சி அச்சுறுத்தல்

போராட்டம் தீவிரமடைந்து வருவதைக் கட்டுப்படுத்தவும், அமைதியை ஏற்படுத்தவும் மத்திய அரசு சார்பாக துணை அமைச்சர்கள் பேச்சுவார்த்தைக்கு அனுப்பப்படும் அளவுக்கு நெருக்கடி உருவாகியுள்ளது.

அண்மைக் காலங்களில் இலங்கை, நேபாளம் மற்றும் பங்களாதேஷ் ஆகிய நாடுகளில் மக்கள் திரண்டு சென்று ஆட்சியை வீழ்த்தியது போன்றதொரு மக்கள் எழுச்சி நிலைமை இங்கும் உருவெடுக்குமோ என்ற அச்சமும், தற்போதைய ஆட்சியாளர்களுக்கு இது ஒரு பெரும் சவாலாக மாறியுள்ளதாகவும் அரசியல் ஆய்வாளர்கள் கணிக்கின்றனர்.

MUST READ