நாட்டின் பல்வேறு பகுதிகளில் நீட் தேர்வுக்கு எதிராக மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் நடத்தி வரும் போராட்டங்கள், அரசியல் கட்சிகளின் நிலைப்பாடு மற்றும் தமிழக அரசின் நடவடிக்கைகள் குறித்து முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர் ஏ.பி.ஜே. அப்துல் கலாம் அவர்களின் அறிவியல் மற்றும் அரசியல் ஆலோசகர் டாக்டர் பொன்ராஜ் அவர்கள் ‘ஈ தமிழ் நியூஸ்’ (ETamil News) நாளிதழுக்கு அளித்த சிறப்பு நேர்காணலின் விவரம்:


நீட் தேர்வு ஒரு கார்ப்பரேட் கொள்ளை:
நீட் தேர்வு என்பது கிராமப்புற மற்றும் ஏழை எளிய மாணவர்களின் மருத்துவக் கனவை நசுக்கும் ஒரு அநீதியான அமைப்பாகும்.
இந்தியாவில் ‘கோச்சிங் சென்டர்’ (Coaching Institutes) தொழில் தற்போது ₹30,000 கோடி முதல் ₹50,000 கோடி வரையிலான மாபெரும் வர்த்தகமாக மாறியுள்ளது.
கார்ப்பரேட் கோச்சிங் மையங்களின் லாபத்திற்காகவே நீட் தேர்வு முறை ஊக்கப்படுத்தப்படுகிறது. சாதாரண ஏழை மாணவர்கள் இதனால் கடுமையாகப் பாதிக்கப்படுகின்றனர்.
மாணவர் போராட்டமும் தவெக அரசு மீதான விமர்சனமும்:
டெல்லி முதல் தமிழகம் வரை உரிமைக்காக வீதியில் இறங்கிப் போராடும் மாணவர்கள் மீது காவல்துறையினர் கடுமையான அடக்குமுறையைப் பிரயோகிக்கின்றனர்.
தமிழகத்தில் மாணவர்கள் அமைதியான முறையில் போராடக்கூட அனுமதி மறுக்கப்பட்டு, கைது செய்யப்படுகின்றனர்.
நாட்டில் மாணவர்கள் தங்கள் எதிர்காலத்திற்காக ரத்தம் சிந்திப் போராடிக் கொண்டிருக்கும் வேளையில், தவெக அரசின் அமைச்சர்களும் நிர்வாகிகளும் ‘ஜனநாயகன்’ திரைப்படத்தின் முதல் காட்சியைக் காணத் திரையரங்குகளில் இருப்பது வேதனையான விஷயம்.
எதிர்க்கட்சிகள் மற்றும் காங்கிரஸ் நிலைப்பாடு:
டெல்லியில் சிஜேபி (CJP) உள்ளிட்ட அமைப்புகள் முன்னெடுக்கும் மாணவர் எழுச்சியைக் கண்டு காங்கிரஸ் போன்ற கட்சிகள் தங்களின் அரசியல் செல்வாக்கு சரிந்துவிடுமோ என்ற அச்சத்தில் இயங்கி வருகின்றன.
வெறும் மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதானின் ராஜினாமாவை மட்டும் கோருவது குறுகிய நோக்கமாகும். மாறாக, நீட் தேர்வை முற்றிலும் ரத்து செய்ய வேண்டும் (Ban NEET) மற்றும் வாக்குச்சீட்டு முறையை மீண்டும் கொண்டுவர வேண்டும் (Ban EVM) என்பதே முதன்மை கோரிக்கையாக இருக்க வேண்டும்.
பெற்றோர்களுக்கும் அரசியல் கட்சிகளுக்கும் உருக்கமான அழைப்பு:
நீட் தேர்வுக்கு எதிரான போராட்டம் என்பது மாணவர்களின் தனிப்பட்ட போராட்டம் மட்டுமல்ல; அது நாட்டின் எதிர்காலத்திற்கான போராட்டம்.
எனவே, திமுக உள்ளிட்ட அனைத்துக் கட்சிகளும், மாணவர்களின் பெற்றோர்களும், பொதுமக்களும் வீதிக்கு வந்து மாணவர்களின் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவிக்க வேண்டும்.
சாலை மறியல் மற்றும் அமைதியான ஜனநாயகப் போராட்டங்கள் மூலம் ஒட்டுமொத்த தேசத்தின் கவனத்தையும் ஈர்த்து, நீட் தேர்வுக்கு நிரந்தரத் தீர்வு காண வேண்டும் என்று டாக்டர் பொன்ராஜ் வலியுறுத்தினார்.
“நாட்டில் குழப்பத்தை உருவாக்க காங்கிரஸ் முயற்சி” – நிர்மலா சீதாராமன் அதிரடி விமர்சனம்!
