Homeசெய்திகள்இந்தியா"நாட்டில் குழப்பத்தை உருவாக்க காங்கிரஸ் முயற்சி" – நிர்மலா சீதாராமன் அதிரடி விமர்சனம்!

“நாட்டில் குழப்பத்தை உருவாக்க காங்கிரஸ் முயற்சி” – நிர்மலா சீதாராமன் அதிரடி விமர்சனம்!

-

- Advertisement -

நாடாளுமன்றத்தில் நீட் விவகாரம் குறித்து விவாதிக்க அரசு தயாராக உள்ள போதிலும், காங்கிரஸ் கட்சி பல நிபந்தனைகளை விதித்துக் குழப்பத்தை ஏற்படுத்தி வருகிறது என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் குற்றம்சாட்டியுள்ளார். டெல்லியில் பிரதமர் இல்லம் முன்பாக அனுமதி இன்றி எதிர்க்கட்சிகள் நடத்திய போராட்டம் குறித்து அவர் அளித்த பேட்டியின் விவரம் வருமாறு:

நிர்மலா சீதாராமன்

“விவாதத்திற்கு ஒப்புக்கொண்ட பிறகும் குழப்பம்!”

*”டெல்லியில் பிரதமர் இல்லம் முன்பாக அனுமதியின்றி போராட்டம் நடந்த இடத்திற்கு அரசே அமைச்சர்களை அனுப்பிய போது, ‘நாடாளுமன்றத்தில் விவாதம் நடத்த வேண்டும்’ என்பதுதான் அவர்களின் முதன்மை நிபந்தனையாக இருந்தது. அதற்கு அரசும் உடனடியாக ஒப்புக்கொண்டது.

ஆனால், இப்போது நாடாளுமன்றத்தில் விரிவான விவாதம் நடத்த அரசு முழுமையாகத் தயாராக இருக்கும் போது, மேலும் பல கூடுதல் நிபந்தனைகளை விதித்து அவர்கள் அவையை நடத்த விடாமல் குழப்பி வருகின்றனர்.”*

we-r-hiring

“உண்மை வெளிவந்துவிடும் என்ற பயம்!”

நீட் விவகாரத்தில் காங்கிரஸின் அரசியல் அணுகுமுறை குறித்துப் பேசிய நிதியமைச்சர்:

*”நீட் தேர்வைப் பயன்படுத்தியும், இளம் மாணவர்களின் எதிர்காலத்தைப் பயன்படுத்தியும் தங்களுக்கு அரசியல் பெயர் கிடைக்க வேண்டும் என்றுதான் காங்கிரஸ் விரும்புகிறது. இதனாலேயே நாடாளுமன்றத்தை முடக்குகிறது.

விவாதம் நடைபெற்றால் உண்மை வெளிவந்துவிடும், அரசு எடுத்த அதிரடி நடவடிக்கைகள் அனைத்தும் வெளிச்சத்திற்கு வந்துவிடும் என்பதால், அவர்கள் விவாதத்திற்கு வர மறுக்கிறார்கள். உண்மை வெளியே வந்தால் அவர்களால் தொடர்ந்து போராட முடியாது என்பதால் இடையூறுகளைச் செய்து வருகின்றனர்.”*

எதிர்க்கட்சிகளுக்கு வேண்டுகோள்

*”இளைஞர்கள் தொடர்பான முக்கியமான பிரச்சினையை காங்கிரஸ் அரசியலாக்குகிறது. காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகளுக்கு நான் கோரிக்கை விடுக்கிறேன்: பிரச்சினைகளை அவைக்குள் வந்து நேர்மையாக விவாதியுங்கள்; அரசு பதிலளிக்கத் தயாராக உள்ளது.

பதிலளிக்கத் தயாராக இருக்கும் அமைச்சர்களையும் அவைத் தலைவரையும் கூச்சலிட்டு அடக்குவதில் எந்தப் பயனும் இல்லை. காங்கிரஸ் கட்சியின் நோக்கம் குழப்பத்தை ஏற்படுத்துவது மட்டுமே தவிர, அவர்களுக்குத் தீர்வுகள் தேவையில்லை.”*

MUST READ