Homeசெய்திகள்தமிழ்நாடு"ஜனநாயகன் படம் மாணவர்களின் போராட்டத்தை திசை திருப்பாது": சபாநாயகர் ஜெ.சி.டி. பிராபகர் உறுதி!

“ஜனநாயகன் படம் மாணவர்களின் போராட்டத்தை திசை திருப்பாது”: சபாநாயகர் ஜெ.சி.டி. பிராபகர் உறுதி!

-

- Advertisement -

நீட் தேர்வை எதிர்த்துப் போராடும் மாணவர்கள் மீது தடியடி நடத்தப்பட்டதாக எழுப்பப்பட்ட கேள்வியால் சபாநாயகர் ஜெ.சி.டி. பிராபகர் சற்று டென்ஷனான சூழலில், “ஜனநாயகன் படம் மாணவர்களின் மூளையைச் சலவை செய்யும் படம் அல்ல; மாணவர்களின் போராட்டத்தைத் திசை திருப்பும் நோக்கமும் அரசுக்கு இல்லை” என்று திட்டவட்டமாகத் தெரிவித்தார்.

சபாநாயகர் ஜெ.சி.டி. பிராபகர்

we-r-hiring

சென்னை ஈக்காட்டுத்தாங்கலில் உள்ள தனியார் விடுதியில் தமிழ் விவசாய வணிகத் தொழில் மற்றும் சேவைகள் சம்மேளனம் சார்பில் ‘தமிழர் 4.0’ என்ற தலைப்பில் உலகளாவிய வர்த்தகம் மற்றும் வணிக உச்சி மாநாடு இன்று தொடங்கியது. இந்த மாநாட்டைச் சபாநாயகர் ஜெ.சி.டி. பிராபகர் குத்துவிளக்கேற்றித் தொடங்கி வைத்தார்.

“ஜனநாயகன் வழிகாட்டும் திரைப்படம்”

நிகழ்ச்சி மேடையில் பேசிய சபாநாயகர் ஜெ.சி.டி. பிராபகர், முதலமைச்சர் ஒரு சரியான, தெளிவான பாதையில்தான் பயணிக்கிறார் என்றார். மேலும், நேற்றைய தினமே ‘ஜனநாயகன்’ படத்தின் முதல் காட்சியையே தான் பார்த்துவிட்டதாகவும், இது உலகெங்கிலும் உள்ள இந்தியர்களும் திரைப்பட ரசிகர்களும் பார்க்க வேண்டிய படம் என்றும் குறிப்பிட்டார்.

ஜாதி, மதங்களை யார் யார் எப்படிப் பிரிக்க முயல்கிறார்கள் என்பதைத் தெளிவாகக் காட்டியுள்ளனர் என்றும், ஒரு முழுமை பெற்ற மனிதன் எந்தத் திசையில் செல்ல வேண்டும் என்பதை வழிகாட்டும் படமாக இது அமைந்துள்ளது என்றும் கூறினார்.

காமராஜர், எம்.ஜி.ஆர், கலைஞர் வரிசையில் முதல்வர் விஜய்!

அரசின் நலத்திட்டங்கள் மற்றும் முதலமைச்சரின் தொலைநோக்குப் பார்வை குறித்துப் பேசிய அவர்:

  • காலை உணவுத் திட்டம் விரிவாக்கம்: காமராஜர் கொண்டு வந்த மதிய உணவுத் திட்டத்தை எம்.ஜி.ஆர் சத்துணவுத் திட்டமாக மாற்றினார். நிதி நெருக்கடி வரும் என்று கூறியபோது, ‘பிச்சை எடுத்தேனும் குழந்தைகளுக்குச் சோறு போடுவேன்’ என்றவர் எம்.ஜி.ஆர். அடுத்து வந்த கலைஞர் அதனுடன் முட்டையைச் சேர்த்தார். முன்னாள் முதல்வர் ஸ்டாலின் கொண்டு வந்த காலை உணவுத் திட்டத்தை, தற்போது முதலமைச்சர் விஜய் 8-ஆம் வகுப்பு வரை விரிவாக்கம் செய்துள்ளார்.

  • நிதியை விட மக்கள் நலனே முக்கியம்: நிதிச்சுமை வந்துவிடும் என்று நாங்கள் பலமுறை சொல்லியும் கேட்காமல், மக்களுக்குக் கொடுத்த வாக்குறுதிகளை உடனே நிறைவேற்ற வேண்டும் என்ற ஆர்வத்தில் முதல்வர் இருக்கிறார்.

  • பட்ஜெட் கூட்டத்தொடர்: அடுத்த வாரத்தில் பட்ஜெட் கூட்டத்தொடர் தொடங்குகிறது. சட்டியில் என்ன இருக்கிறது என்று பார்த்துவிட்ட முதல்வர், அதை நிரப்புவதற்கான வேலைகளைச் செய்து வருகிறார். நிச்சயம் மக்களுக்கு அள்ளிக் கொடுப்பார்.

எனக்கு ‘ஜே.சி.டி’ பெயர் வந்தது எப்படி? – சுவாரஸ்யக் கதை

தனக்கு ‘ஜே.சி.டி. பிராபகர்’ என்று பெயர் வந்ததற்கான சுவாரஸ்ய பின்னணியை சபாநாயகர் பகிர்ந்துகொண்டார். ஒருமுறை எம்.ஜி.ஆரைச் சந்திக்கச் சென்றிருந்தபோது, அதே நாளில் எல்.டி.டி.இ பிரபாகரனும் வந்திருந்ததாகக் குறிப்பிட்டார்.

உதவியாளர் சென்று ‘பிரபாகரன் வந்திருக்கிறார்’ என்று கூறியதும், ‘ஏற்கனவே வந்துவிட்டார் அல்லவா’ என எம்.ஜி.ஆர் கேட்டார். அதற்கு உதவியாளர், ‘முன்பு வந்தது ஜே.சி.டி. பிராபகர், இப்போது வந்திருப்பது விடுதலைப் புலிகள் பிரபாகரன்’ என்றார். உடனே எம்.ஜி.ஆர், ‘இனிமேல் இவரை ஜே.சி.டி பிராபகர் என்று அழையுங்கள், அவரை பிரபாகரன் என்று அழையுங்கள்’ என்றார். அப்படி வந்ததுதான் இந்த பெயர் எனக் கூறினார்.

செய்தியாளர்கள் சந்திப்பில் சுவாரஸ்யம்

நிகழ்ச்சிக்குப் பின் செய்தியாளர்களைச் சந்தித்த சபாநாயகரிடம், நீட் போராட்ட மாணவர்கள் மீதான தடியடி குறித்துக் கேள்வி எழுப்பப்பட்டபோது சற்று டென்ஷனான அவர், ஊடகங்கள் எந்த நிகழ்ச்சிக்கு வருகிறீர்களோ அது தொடர்பான கேள்விகளைக் கேட்க வேண்டும் என்றும், தொழில்முனைவோரின் கோரிக்கைகள் பற்றிப் பேசினால் அவர்களும் பயன்பெறுவார்கள், அதை விடுத்துப் பிற பிரச்சினைகளைக் கேட்கிறீர்கள் என்றும் தெரிவித்தார்.

தொடர்ந்து ‘ஜனநாயகன்’ படம் குறித்த கேள்விக்கு, “ஜனநாயகன் படம் எப்போது வெளியாகும் என்பது ஏற்கனவே அறிவிக்கப்பட்டது. இது மாணவர்களை மூளைச்சலவை செய்யும் படம் அல்ல; மாணவர்களின் போராட்டத்தைத் திசை திருப்பும் நோக்கம் எங்களின் அரசுக்கு இல்லை” எனப் பதிலளித்தார்.

சிவகங்கையில் நீட் எதிராக ‘ஜனநாயகத்திற்கு பாடை கட்டி’ நூதன போராட்டம்! கைது.

MUST READ