- Advertisement -
மாணவர்கள் மீதான காவல்துறை அடக்குமுறை மற்றும் வன்முறைச் சம்பவங்களுக்கு மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவே நேரடிப் பொறுப்பு என்று காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே (Mallikarjun Kharge) கடுமையாகக் குற்றம் சாட்டியுள்ளார்.


இதுகுறித்து அவர் மேலும் கூறுகையில், “இந்திய வரலாற்றில் முன்னெப்போதும் இது போன்ற கொடூரமான முறையில் மாணவர்களின் போராட்டங்கள் ஒடுக்கப்பட்டதில்லை. அமைதியான முறையில் போராடும் மாணவர்கள் மீது வன்முறையைப் பிரயோகிப்பதும், அவர்களை ஒடுக்குவதும் ஜனநாயகத்தின் மீதான நேரடித் தாக்குதலாகும்” என்று தெரிவித்தார். மேலும், மாணவர்களின் எதிர்காலத்துடன் விளையாடும் மத்திய அரசின் இந்தப் போக்கைக் கண்டிப்பதாகவும் அவர் கூறினார்.
பொதுத் தேர்வுகள் சட்டத்திருத்த மசோதா தாக்கல்: அமளி காரணமாக மக்களவை பிற்பகல் 2 மணி வரை ஒத்திவைப்பு!
