பிரபல நடிகை கௌதமியின் சொத்துகளை அபகரித்த விவகாரத்தில் கைது செய்யப்பட்டுள்ள அழகப்பன் மற்றும் அவரது உறவினர்களுக்குச் சொந்தமான இடங்களில் கடந்த ஜூன் 17-ம் தேதியன்று அமலாக்கத்துறை (ED) அதிரடிச் சோதனை நடத்தியது.


சொத்துகளை மோசடியாக அபகரித்து, அதன் மூலம் கிடைக்கப்பெற்ற பணத்தை சட்டவிரோதமாகப் பணப் பரிமாற்றம் (Money Laundering) செய்துள்ளதாகக் கூறி அமலாக்கத்துறை வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகிறது.
இந்த வழக்கின் தொடர்ச்சியாகவும், அமலாக்கத்துறை விசாரணைக்கு ஆஜராகும்படி விடுக்கப்பட்ட சம்மனின் அடிப்படையிலும், நடிகை கௌதமி இன்று சென்னை அமலாக்கத்துறை அலுவலகத்தில் நேரில் ஆஜராகியுள்ளார். அவரிடம் சொத்து அபகரிப்பு மற்றும் பணப் பரிமாற்றம் குறித்த விவரங்கள் குறித்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வருவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
