Homeசெய்திகள்தமிழ்நாடுதமிழ்நாட்டில் நடப்பது யார் ஆட்சி? பாஜகவின் காய்நகர்த்தல்களும் தமிழக அரசியலும்! சீக்ரெட்' உடைத்த ஆளூர் ஷானவாஸ்!

தமிழ்நாட்டில் நடப்பது யார் ஆட்சி? பாஜகவின் காய்நகர்த்தல்களும் தமிழக அரசியலும்! சீக்ரெட்’ உடைத்த ஆளூர் ஷானவாஸ்!

-

- Advertisement -

தமிழ்நாட்டின் தற்போதைய அரசியல் சூழல், ஆட்சி நிர்வாகத்தின் போக்கைக் தீர்மானிக்கும் சக்திகள் மற்றும் பின்னணி நகர்வுகள் குறித்து சன் நியூஸ் (Sun News) தொலைக்காட்சியின் சிறப்பு நிகழ்ச்சியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் துணைப் பொதுச்செயலாளர் ஆளூர் ஷானவாஸ் கலந்து கொண்டு மனம் திறந்து பல்வேறு முக்கியக் கருத்துகளைப் பகிர்ந்து கொண்டார்.தமிழ்நாட்டில் நடப்பது யார் ஆட்சி? பாஜகவின் காய்நகர்த்தல்களும் தமிழக அரசியலும்! சீக்ரெட்' உடைத்த ஆளூர் ஷானவாஸ்!

சமூகநீதியில் சமரசமில்லை
மாநிலத்தின் நிர்வாகச் செயல்பாடுகள் மற்றும் கூட்டணிக் கணக்கீடுகள் குறித்துப் பேசிய அவர், திராவிட மாடல் ஆட்சியின் செயல்பாடுகளையும், எதிர்க்கட்சிகளின் விமர்சனங்களுக்கான பதில்களையும் தெளிவுபடுத்தினார். “மாநில உரிமைகளைப் பாதுகாப்பதிலும், சமூகநீதிக் கொள்கைகளை நிலைநிறுத்துவதிலும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி எப்போதுமே உறுதியோடு நிற்பதைத் தொடரும்” என்று அவர் வலியுறுத்தினார்.

we-r-hiring

மதவாதக் கணக்குகள் பழிக்காது
“தமிழ்நாட்டில் நடப்பது யார் ஆட்சி? பாஜகவின் கண் அசைவில்தான் காய்நகர்வுகள் நடக்கிறதா?” என்ற கேள்விக்கு ஆளூர் ஷானவாஸ் அளித்த பதிலாவது, “தமிழக அரசியலில் சதிவேலைகள் மூலமாக ஊடுருவ பாஜக தொடர்ச்சியாக முயற்சித்து வருகிறது. ஆனால், தமிழ்நாடு என்பது பெரியாரும் அம்பேத்கரும் விதைத்த சுயமரியாதை மண்ணாகும். மதவாத சக்திகளின் எதேச்சதிகாரக் கணக்குகளைத் தமிழக மக்கள் ஒருபோதும் ஏற்க மாட்டார்கள்; அதைத் தொடர்ச்சியாக முறியடிப்பார்கள்.”

வரலாற்றுத் தேவை கூட்டணி
தேர்தல் அரசியல் மற்றும் கூட்டணிக் கட்சிகளுடனான பயணம் குறித்து விவரிக்கையில், “மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி என்பது தேசத்தைப் பாதுகாப்பதற்காக உருவான ஒரு வரலாற்றுத் தேவையாகும். அதிகாரப் பகிர்வை உறுதிசெய்வதும், ஒடுக்கப்பட்டோருக்கான குரல் சட்டமன்றத்திலும் நாடாளுமன்றத்திலும் உரக்க ஒலிப்பதைச் சாத்தியமாக்குவதுமே எங்களின் பிரதான இலக்கு” எனக் குறிப்பிட்டார்.

மேலும், மாநில உரிமைகள் பறிபோகும் ஒவ்வொரு தருணத்திலும் அதற்கு எதிராக முதன்மையாகக் குரல் கொடுக்கும் இயக்கமாக விசிக தொடர்ந்து களத்தில் நிற்கும் என்று குறிப்பிட்ட அவர், தமிழ்நாட்டின் அரசியல் எதிர்காலத்தைத் தீர்மானிப்பதில் மக்களின் விழிப்புணர்வே மிக முக்கிய சக்தி எனக் கூறியுள்ளாா்.

மக்களுக்கு அசௌகரியத்தை ஏற்படுத்தும் போராட்டங்களை வன்முறை என்று குழப்பிக்கொள்ளக் கூடாது

MUST READ