தமிழ்நாடு அரசின் சமூகநீதித்துறை அமைச்சராகப் பொறுப்பேற்றுள்ள திருமிகு. வன்னி அரசு அவர்கள், திரை உலகின் சூப்பர் ஸ்டார் திருமிகு. ரஜினிகாந்த் அவர்களை நேரில் சந்தித்து வாழ்த்துகளைப் பெற்றுள்ளார். சமூகநீதித்துறை அமைச்சராகப் பதவியேற்றவுடன் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களைச் சந்தித்து வாழ்த்துப் பெற தான் பெரிதும் விரும்பியதாகவும், தற்போது அதற்கான வாய்ப்பு கனிந்து வந்ததாகவும் அமைச்சர் வன்னி அரசு தெரிவித்துள்ளார்.


இந்தச் சந்திப்பின் போது, அமைச்சரை அன்புடன் வரவேற்ற நடிகர் ரஜினிகாந்த், “நிறைய மக்களுக்கு செய்யுங்கள், வாழ்த்துகள்” என்று கூறி அவரை மனதார வாழ்த்தி அனுப்பியுள்ளதாக அமைச்சர் வன்னி அரசு சமூக வலைத்தளம் மூலமாகத் தெரிவித்துள்ளார்.
சமூகநீதித்துறை அமைச்சராகப் பொறுப்பேற்ற பிறகு, அமைச்சர் வன்னி அரசு அவர்கள் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தைச் சந்தித்துள்ள இந்த நிகழ்வு தற்போது அரசியல் மற்றும் சினிமா வட்டாரங்களில் பெரிதும் பேசப்பட்டு வருகிறது.
“க்ளைமாக்ஸை ஏன்டா சொன்ன?” – ஸ்பைடர்மேன் தியேட்டரில் வெடித்த பயங்கர மோதல்..
