HomeBreaking Newsமுதல்வர் விஜய் குறித்து சர்சை பேட்டி: நக்கீரன் கோபால் மீது சைபர் கிரைம் போலீசார் வழக்கு

முதல்வர் விஜய் குறித்து சர்சை பேட்டி: நக்கீரன் கோபால் மீது சைபர் கிரைம் போலீசார் வழக்கு

-

- Advertisement -

கரூரில் நடந்த தள்ளுமுள்ள சம்பவம் தொடர்பாகவும், அது தொடர்பாக தமிழக முதல்வர் சி. ஜோசப் விஜய் மீதும் அவதூறான கருத்துகளை தெரிவித்ததாக ‘நக்கீரன்’ இதழின் ஆசிரியர் ஆர். கோபால் மீது சென்னை மாநகர சைபர் கிரைம் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

கோபால்

we-r-hiring

யூடியூப் ஒன்றில் அளித்த பேட்டியில் கோபால் பேசுகையில், “கரூர் துயர சம்பவத்தை தனது கடைசி திரைப்படமான ‘ஜனநாயகன்’ படத்திற்காக விஜய் பயன்படுத்த நினைக்கிறார்” என்றும், “41 பேர் உயிரிழப்புக்கு முதல்வர் விஜய்யே முழு பொறுப்பு” என்றும் குற்றம் சாட்டியதாக புகாரில் கூறப்பட்டுள்ளது.

இது தொடர்பாக நந்தகுமார் என்பவர் அளித்த புகாரின் அடிப்படையில், இந்திய தண்டனைச் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது. சமூக வலைதளங்களில் இந்த செய்தி பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.

“கோடிக்கணக்கில் செலவழித்து புதிய அலுவலகமா? – மக்களின் அடிப்படைப் பிரச்சினைகளைப் புறக்கணிக்கும் அரசின் மீது ராஜா தமிழ்மாறன் கடும் விமர்சனம்!”

MUST READ