முதல்வர் சி. ஜோசப் விஜய் தலைமையிலான தமிழக அமைச்சரவையில் விரைவில் பெரிய அளவில் மாற்றம் வர உள்ளது. அமைச்சர்கள் ஒவ்வொருவரின் செயல்பாடு, நிர்வாக திறன், கட்சி வளர்சிக்கான பங்களிப்பு குறித்து தலைமைச் செயலாளர் எம். சாய் குமார் மூலம் தயாரிக்கப்பட்ட ரகசிய ஆய்வறிக்கையின் அடிப்படையில் இந்த அதிரடி முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக உயர்மட்ட வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.


செப்டம்பரில் முதல்கட்டம்
செப்டம்பர் மாதம் நடைபெற உள்ள பட்ஜெட் கூட்டத்தொடர் முடிந்த உடனேயே இந்த அமைச்சரவை மாற்றம் இருக்கும். இது முதல்கட்ட மாற்றமாகும். இடைத்தேர்தல் முடிந்த பிறகு அதிமுகவில் இருந்து விலகி வந்தவர்களுக்கு வாய்பு கொடுக்கும் வகையில் இரண்டாம் கட்ட மாற்றம் இருக்கும் எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
யாருக்கு ஆபத்து?
ஆய்வறிக்கையின் அடிப்படையில் 4 அமைச்சர்கள் பதவியை இழக்க வாய்புள்ளது. அதில் ஒருவர் காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவர்.
பி. விஸ்வநாதன் – உயர் கல்வித்துறை: முதல்வரின் எச்சரிக்கைகளை மீறி தொடர் சர்சைகளில் சிக்கியதாக கூறப்படுகிறது.
ஏ. விஜய் தமிழன் பார்திபன் – போக்குவரத்துத்துறை: கட்சி நிர்வாகிகள் குறித்து பல புகார்கள் வந்துள்ளன.
கே. ஜெகதீஸ்வரி – சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை: கட்சி நிர்வாகிகள் சம்பந்தப்பட்ட வன்முறை குற்றச்சாட்டுகள் மற்றும் ரவுடிகளுடன் தொடர்பு என்ற குற்றச்சாட்டு உள்ளது.
டி. சரத்குமார் – மனிதவள மேலாண்மைத்துறை: பொது இடத்தில் போதைப்பொருள் பயன்படுத்தியதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
யாருக்கு துறை மாற்றம்?
எஸ். கீர்தனா, எஸ். கமலி ஆகியோரின் நிர்வாக செயல்பாடுகள் குறித்து உள்ளுக்குள் ஆய்வு நடந்துள்ளது. அதனடிப்படையில் இவர்களுக்கு புதிய துறைகள் ஒதுக்கப்படலாம். காங்கிரஸை சேர்ந்த எஸ். ராஜேஷ் குமாருக்கு சுற்றுலாத்துறையை விட முக்கியமான துறை கிடைக்க வாய்புள்ளது.
வரிசையில் யார்?
முன்னாள் அமைச்சர்கள் சி. விஜயபாஸ்கர், எம்.ஆர். விஜயபாஸ்கர் மற்றும் மரகதம் குமரவேல் ஆகியோர் அடுத்த அமைச்சரவையில் இடம்பெற அதிக வாய்ப்புள்ளது. மேலும் கூட்டணி கட்சியான விசிகவை சேர்ந்த வன்னி அரசுக்கும் முக்கிய துறை கிடைக்கலாம் என பேசப்படுகிறது.
முதல்வரின் முடிவு
“ஒவ்வொரு அமைச்சரின் செயல்பாடு குறித்தும் விரிவான அறிக்கை கேட்டிருக்கிறேன். அந்த அறிக்கையின் அடிப்படையில் மட்டுமே இந்த மாற்றம் இருக்கும்” என முதல்வர் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இடைத்தேர்தல் தேதி இன்னும் அறிவிக்கப்படாததால், இது நிர்வாக ரீதியான மாற்றமாக மட்டுமே இருக்கும். அரசியல் ரீதியான மாற்றம் இடைத்தேர்தலுக்கு பிறகு இருக்கும் எனவும் கூறப்படுகிறது.
முதல்வர் விஜய் குறித்து சர்சை பேட்டி: நக்கீரன் கோபால் மீது சைபர் கிரைம் போலீசார் வழக்கு
