Homeசெய்திகள்தமிழ்நாடுகிராமப்புற வேலைவாய்ப்பில் புதிய சாதனை- 'வெற்றி 150' திட்டத்திற்கு ஆண்டுக்கு ரூ.100 கோடி ஒதுக்கீடு! 150...

கிராமப்புற வேலைவாய்ப்பில் புதிய சாதனை- ‘வெற்றி 150’ திட்டத்திற்கு ஆண்டுக்கு ரூ.100 கோடி ஒதுக்கீடு! 150 நாட்கள் வேலை உறுதி!

-

- Advertisement -

தமிழகச் சட்டப்பேரவையில் 2026-27ஆம் நிதியாண்டிற்கான பட்ஜெட்டைத் தமிழக நிதி அமைச்சர் மரியா வில்சன் இன்று தாக்கல் செய்தார். முதலமைச்சர் விஜய் தலைமையிலான தவெக அரசு தாக்கல் செய்த முதல் பட்ஜெட்டில், கிராமப்புற உழைப்பாளர்களின் வாழ்வாதாரத்தை உயர்த்தும் நோக்கில் பல்வேறு முக்கிய திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.

கிராமப்புற வேலைவாய்ப்பில் புதிய சாதனை- 'வெற்றி 150' திட்டத்திற்கு ஆண்டுக்கு ரூ.100 கோடி ஒதுக்கீடு! 150 நாட்கள் வேலை உறுதி!

we-r-hiring

இதில், கிராமப்புற வேலைவாய்ப்பை உறுதி செய்யும் VB – G RAM G திட்டத்தின் கீழ், ஒரு முக்கிய துணைத் திட்டமாக ‘வெற்றி 150’ திட்டம் செயல்படுத்தப்படும் என்றும், இதற்காக ஆண்டுதோறும் ரூ.100 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படும் என்றும் நிதி அமைச்சர் தனது பட்ஜெட் உரையில் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.

ஆண்டுக்கு 150 நாட்கள் வேலை உறுதி
கூடுதல் வேலைநாட்கள்- ‘வெற்றி 150’ திட்டத்தின் முக்கிய நோக்கம், கிராமப்புறங்களில் ஏற்கனவே 125 நாட்கள் பணி செய்யும் குடும்பங்களுக்குக் கூடுதலாக 25 நாட்கள் பணி வழங்குவதாகும். 150 நாட்கள் இலக்கு இதன் மூலம் கிராமப்புறக் குடும்பங்கள் ஆண்டிற்கு மொத்தம் 150 நாட்கள் முழுமையான வேலைவாய்ப்பைப் பெற வழிவகை செய்யப்பட்டுள்ளது.

ஆண்டுக்கு ரூ.100 கோடி சிறப்பு நிதி
கிராமப்புற ஏழை எளிய மக்களின் பொருளாதாரப் பாதுகாப்பை உறுதி செய்யவும், வாழ்வாதாரத்தை மேம்படுத்தவும் இத்துணைத் திட்டத்திற்கு ஆண்டிற்கு ரூ.100 கோடி நிதியை அரசு ஒதுக்கீடு செய்துள்ளது. இத்தொகை மூலம் கிராமப்புறங்களில் நிலத்தடி நீர் ஆதாரங்களைப் பெருக்குதல், நீர்நிலைகளைத் தூர்வாருதல் மற்றும் கிராமப்புறக் கட்டமைப்புகளை மேம்படுத்தும் பணிகள் முடுக்கிவிடப்படும்.

கிராமப்புற உழைப்பாளர்கள் வரவேற்பு
கிராமப்புறங்களில் வறுமையைக் குறைக்கவும், விவசாயக் காலங்கள் இல்லாத நேரங்களில் விவசாயத் தொழிலாளர்களுக்கு நிலையான வருமானம் கிடைக்கவும் இக்கூடுதல் 25 நாட்கள் வேலைவாய்ப்பு திட்டம் பெரிதும் உதவும். தவெக அரசின் இந்த ‘வெற்றி 150’ திட்ட அறிவிப்புக்குக் கிராமப்புற மக்கள் மற்றும் தொழிலாளர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது.

‘சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப் படை’ மேம்பாட்டிற்கு ரூ.354 கோடி ஒதுக்கீடு!

MUST READ