Homeசெய்திகள்தமிழ்நாடுபட்ஜெட்டில் மக்கள் நல அறிவிப்புகள் வரவேற்புக்குரியவை; தனியார்மய முனைப்பு ஏற்கத்தக்கதல்ல: சிபிஎம் மாநிலக்குழு அறிக்கை!

பட்ஜெட்டில் மக்கள் நல அறிவிப்புகள் வரவேற்புக்குரியவை; தனியார்மய முனைப்பு ஏற்கத்தக்கதல்ல: சிபிஎம் மாநிலக்குழு அறிக்கை!

-

- Advertisement -

2026-27ஆம் ஆண்டிற்கான தமிழ்நாடு பட்ஜெட்டில் இடம்பெற்றுள்ள மக்கள் நலனுக்கான பல்வேறு அறிவிப்புகளை இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) வரவேற்றுள்ளது. அதேசமயம், நவீன தாராளமய பாதையை ஒட்டி அமைந்துள்ள தனியார்மய முனைப்புகளைக் கைவிட வேண்டும் என்றும், மக்கள் பெரிதும் எதிர்பார்த்த தேர்தல் வாக்குறுதிகள் முழுமையாக நிறைவேற்றப்பட வேண்டும் என்றும் சிபிஎம் மாநிலச் செயலாளர் பெ. சண்முகம் வலியுறுத்தியுள்ளார். மாநிலக்குழு வெளியிட்டுள்ள அறிக்கையின் முக்கிய அம்சங்கள் சுருக்கமாக:

பட்ஜெட்டில்

we-r-hiring

வரவேற்கத்தக்க அறிவிப்புகள்:

  • புதிய கட்டண உயர்வுகள் எதுவும் இல்லை என்பதும், வருவாய் கசிவைத் தடுப்பதாகக் கூறியிருப்பதும் பாராட்டத்தக்கது.

  • பள்ளி மற்றும் மாணவர் விடுதிகள் கட்டமைப்பு மேம்பாடு, 500 புதிய அங்கன்வாடிகள், 5 மண்டலங்களில் புற்றுநோய் சிகிச்சை மையங்கள், மூத்த குடிமக்களுக்கான நடமாடும் மருத்துவகங்கள் மற்றும் ‘சூப்பர் கிளீன் சூப்பர் கேம்பஸ்’ திட்டம் ஆகியவை வரவேற்புக்குரியவை.

  • ஜென் இசட் மாணவர்களுக்கு நவீன மிதிவண்டிகள், திருநர்களுக்கு சமூகப் பொருளாதார அதிகாரமளிப்பு, பொது நூலகங்கள் டிஜிட்டல் மயம் மற்றும் ‘திருப்பூர் டெக்ஸ்டைல்ஸ் டெக்னாலஜி சென்டர்’ போன்ற அறிவிப்புகள் சிறப்பானவை.

  • சிறுபான்மையினர் நலனுக்காக புனித ஹஜ் மானியம் மற்றும் கல்லறைத் தோட்ட உட்கட்டமைப்பு மேம்பாட்டுக்கான நிதி ஒதுக்கீடு பாராட்டத்தக்கது.

ஏமாற்றமளிக்கும் அம்சங்கள்:

  • மக்கள் பெரிதும் எதிர்பார்த்த மகளிர் உரிமைத்தொகை மற்றும் முதியோர் உதவித்தொகை உயர்த்தப்படவில்லை.

  • பள்ளிக்கல்வி மற்றும் உயர்கல்விக்கான நிதி ஒதுக்கீடு குறைக்கப்பட்டுள்ளதும், வேலைவாய்ப்பு உருவாக்கம் குறித்த திட்டவட்டமான அறிவிப்புகள் இல்லாததும் ஏமாற்றம் அளிக்கிறது.

  • அரசுப் பள்ளிகளில் தூய்மைப் பணிகளுக்கான நிதி ஒதுக்கீடு மிகவும் குறைவாக உள்ளது (ஒரு பள்ளிக்கு ஒரு நாளைக்கு ரூ.380/-).

  • மாற்றுத்திறனாளிகளுக்கான மாதாந்திர உதவித்தொகை உயர்த்தப்படவில்லை; மீன்பிடி தடைக்கால நிவாரணம் குறைவாக அறிவிக்கப்பட்டுள்ளது.

முக்கியக் கோரிக்கைகள்:

  • மாணவர் விடுதி மேம்பாடு, நகர்ப்புற மேம்பாடு மற்றும் மின் பகிர்மானத்தில் அரசு – தனியார் கூட்டு (PPP) முறையைக் கடைப்பிடிப்பது நவீன தாராளமய பாதையாகும்; இது ஏற்புடையதல்ல.

  • கிரானைட் மற்றும் கனிம வளங்கள் அரசின் முழுக் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவரப்பட வேண்டும்.

  • பழைய பென்சன் திட்டம் பரிசீலிக்கப்படும் என்ற தேர்தல் வாக்குறுதி உடனடியாக நிறைவேற்றப்பட வேண்டும்.

  • புதிய வீடு கட்டும் திட்டத்திற்கான நிதி உதவி இன்றைய கட்டுமானச் செலவுகளுக்கு ஏற்ப 10 லட்ச ரூபாயாக உயர்த்தப்பட வேண்டும்.

தேர்தல் வாக்குறுதிகள் மீதான மக்கள் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றுவதோடு, மாநிலத்தின் நிதி உரிமையை நிலைநாட்ட ஒன்றிய அரசை நோக்கி வலுவான குரல் எழுப்ப வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கேட்டுக்கொண்டுள்ளது.

MUST READ