Homeசெய்திகள்தமிழ்நாடுபோராளி ஓய்வதில்லை: கலைஞரின் 8-வது ஆண்டு நினைவு நாள் கூட்டத்தில் கனிமொழி எம்.பி., அமைச்சர் பி.கே....

போராளி ஓய்வதில்லை: கலைஞரின் 8-வது ஆண்டு நினைவு நாள் கூட்டத்தில் கனிமொழி எம்.பி., அமைச்சர் பி.கே. சேகர்பாபு ஆவேச உரை!

-

- Advertisement -

முத்தமிழறிஞர் கலைஞர் தமிழ்நாட்டின் உரிமைகளுக்காகத் தன் வாழ்நாள் முழுவதும் ஒரு முறை கூட விட்டுக்கொடுக்காமல் போராடியவர் என்றும், தி.மு.க. எப்போதும் விவசாயிகள் மற்றும் மாநில உரிமைகளுக்காகக் குரல் கொடுப்பதில் உறுதியாக நிற்கும் என்றும் அக்கட்சியின் துணைப் பொதுச்செயலாளர் கனிமொழி கருணாநிதி எம்.பி. ஆவேசமாகப் பேசினார்.போராளி ஓய்வதில்லை: கலைஞரின் 8-வது ஆண்டு நினைவு நாள் கூட்டத்தில் கனிமொழி எம்.பி., அமைச்சர் பி.கே. சேகர்பாபு ஆவேச உரை!னை கிழக்கு மாவட்ட தி.மு.க. சார்பில், முன்னாள் முதல்வர் கலைஞரின் எட்டாம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு “போராளி ஓய்வதில்லை” என்ற தலைப்பில் 10 நாட்கள் நடைபெறும் தொடர் நிகழ்வுகளின் ஒரு பகுதியாக, புரசைவாக்கத்தில் பிரம்மாண்ட பொதுக்கூட்டம் நடைபெற்றது. மாவட்ட இளைஞர் அணி துணை அமைப்பாளர் வினோத் தலைமை தாங்கிய இந்நிகழ்ச்சியில், சென்னை கிழக்கு மாவட்டச் செயலாளரும் அமைச்சருமான பி.கே. சேகர்பாபு, தி.மு.க. துணைப் பொதுச்செயலாளர் கனிமொழி கருணாநிதி, மகளிர் அணி செயலாளர் ஹெலன் டேவிட்சன், மகளிர் தொண்டரணி செயலாளர் நாமக்கல் ராணி மற்றும் தலைமை செயற்குழு உறுப்பினரும் சென்னை மேயருமான பிரியா ராஜன் உள்ளிட்ட ஏராளமான முக்கிய நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் கலந்து கொண்டனர்.

அமைச்சர் பி.கே. சேகர்பாபுவின் உரை
நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் பி.கே. சேகர்பாபு, “பவள விழா கண்ட இந்த இயக்கம், தனது உரிமைகளுக்காக ஒரு அடி முன்னேறி வந்தால் பத்தடி முன்னேறி வரும். மின்தடை போன்ற சதிவேலைகளைச் செய்து இந்தக் கூட்டத்தைத் முடக்கப் பார்த்தாலும், ஜெனரேட்டர் மூலம் விளக்கேற்றி வெற்றிகரமாக நடத்தி காட்டியுள்ளோம். மரணத்தின் விளிம்பு வரை சென்றாலும் எங்களது குரல் ‘தளபதி வாழ்க’ என்றுதான் ஒலிக்கும்” எனக் குறிப்பிட்டார்.

we-r-hiring

கனிமொழி கருணாநிதியின் சிறப்புரை
கூட்டத்தில் சிறப்புரையாற்றிய கனிமொழி கருணாநிதி, கலைஞரின் இளமைக்காலப் போராட்டங்கள் மற்றும் அரசியல் சோதனைகளை நினைவுகூர்ந்து பேசியதாவது, மாநில உரிமை மற்றும் தொகுதி மறுசீரமைப்பு: தமிழ்நாட்டின் பிரதிநிதித்துவம் எந்தச் சூழலிலும் குறைந்துவிடக் கூடாது என்பதில் தி.மு.க. உறுதியாக உள்ளது. தொகுதி மறுசீரமைப்பு விவகாரத்தில் முதன்முதலில் குரல் கொடுத்து, பிற மாநில முதல்வர்களை ஒருங்கிணைத்து சென்னையில் மாநாடு நடத்தியவர் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் ஆவார்.போராளி ஓய்வதில்லை: கலைஞரின் 8-வது ஆண்டு நினைவு நாள் கூட்டத்தில் கனிமொழி எம்.பி., அமைச்சர் பி.கே. சேகர்பாபு ஆவேச உரை!

பட்ஜெட்டில் திட்டங்களின் பெயர்களை மாற்றுவது குறித்துப் பேசிய அவர், ‘நான் முதல்வன்’ திட்டம் என்பது மாணவர்கள் தங்களைச் சிறந்த முதல்வர்களாக உணர்வதற்காகக் கொண்டுவரப்பட்டது. ‘முதல்வர் படைப்பகம்’ என்றால் அது முதலமைச்சரைக் குறிக்கும்; அதை முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் என்று சிலர் புரிந்து கொண்டால் அதற்கு நாங்கள் பொறுப்பல்ல என்றார்.

கலைஞர் மற்றும் தி.மு.க.-வை விட விவசாயிகளுக்குக் குரல் கொடுத்த இயக்கம் வேறு எதுவுமில்லை. மக்களை ஏமாற்றி ஆட்சிக்கு வந்துவிட்டு விவசாயிகளின் கண்ணீரில் வாழ்பவர்களின் முகத்திரையை மக்கள் விரைவில் கிழிப்பார்கள். மேலும், சமூக நீதி, மாநில உரிமை மற்றும் மக்கள் நலனுக்காக தி.மு.க. என்றும் சமரசம் செய்துகொள்ளாது என்ற உறுதியுடன் நிறைவடைந்த இந்த நிகழ்வு, அப்பகுதியில் பெரும் அரசியல் கவனத்தைப் பெற்றுள்ளது.

கல்தோன்றி மண்தோன்றாக் காலத்தே மூத்த தமிழின் போர்க்குடி: கலைஞரின் 8ஆம் ஆண்டு நினைவேந்தலில் மூத்த பத்திரிகையாளர் என்.ராம் உரை!

MUST READ