Homeசெய்திகள்இந்தியாஎஃப்சிஆர்ஏ(FCRA) திருத்த மசோதாவை முழுமையாகத் திரும்பப் பெற வேண்டும்: கூட்டு நாடாளுமன்றக் குழுவுக்கு அனுப்பப்பட்டதை வரவேற்கிறேன்...

எஃப்சிஆர்ஏ(FCRA) திருத்த மசோதாவை முழுமையாகத் திரும்பப் பெற வேண்டும்: கூட்டு நாடாளுமன்றக் குழுவுக்கு அனுப்பப்பட்டதை வரவேற்கிறேன் – பி.வில்சன் எம்.பி. வலியுறுத்தல்!

-

- Advertisement -

வெளிநாட்டு நிதிப் பங்களிப்பு (ஒழுங்குமுறை) சட்டத் (FCRA) திருத்த மசோதாவை விரிவான ஆய்விற்காகக் கூட்டு நாடாளுமன்றக் குழுவிற்கு (JPC) அனுப்ப மத்திய அரசு எடுத்துள்ள முடிவை வரவேற்கும் அதேவேளையில், இந்த மசோதாவை முழுமையாகத் திரும்பப் பெற வேண்டும் என்பதே தங்களது முதன்மையான கோரிக்கை எனச் சிறுபான்மையினருக்கான கூட்டு நடவடிக்கை மன்றத்தின் (JAFM) தலைவரும், மாநிலங்களவை உறுப்பினருமான மூத்த வழக்கறிஞர் பி.வில்சன் தெரிவித்துள்ளார்.

பி.வில்சன்

we-r-hiring

மத்திய அரசு கொண்டு வந்துள்ள FCRA திருத்த மசோதாவிற்கு எதிராகச் சிறுபான்மையினருக்கான கூட்டு நடவடிக்கை மன்றம் தொடர்ந்து பல்வேறு கட்டப் போராட்டங்களை முன்னெடுத்து வரும் நிலையில், இதுகுறித்து பி.வில்சன் வெளியிட்டுள்ள விரிவான அறிக்கையின் விவரம் வருமாறு:

கூட்டு நாடாளுமன்றக் குழுவிற்கு அனுப்புவது ஒரு நேர்மறையான நடவடிக்கை:

FCRA திருத்த மசோதாவை மத்திய அரசு முழுமையாகத் திரும்பப் பெற வேண்டும் என்ற கோரிக்கையை இதுவரை ஏற்றுக்கொள்ளவில்லை என்றாலும், அம்மசோதாவை விரிவான ஆய்விற்காகக் கூட்டு நாடாளுமன்றக் குழுவிற்கு அனுப்பியிருப்பது ஒரு நேர்மறையான மற்றும் ஆக்கபூர்வமான நடவடிக்கையாகக் கருதுவதாக பி.வில்சன் குறிப்பிட்டுள்ளார்.

இந்த நடவடிக்கை, மசோதாவை நாடாளுமன்றத்தில் விரிவாக ஆய்வு செய்வதற்கும், நாடு முழுவதும் உள்ள தேவாலயங்கள், தொண்டு நிறுவனங்கள், கல்வி மற்றும் சுகாதார நிறுவனங்கள், சட்ட வல்லுநர்கள், சமூக அமைப்புகள் மற்றும் சிறுபான்மை பிரதிநிதிகள் எழுப்பியுள்ள கவலைகளை முழுமையாகப் பரிசீலிப்பதற்கும் முக்கியமான வாய்ப்பை ஏற்படுத்தியுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

தொண்டு நிறுவனங்கள் மீது தீவிர தாக்கம்:
முன்மொழியப்பட்டுள்ள திருத்தங்கள் தொண்டு, கல்வி, சுகாதாரம், மனிதநேய சேவை, சமூக சேவை மற்றும் மதப் பணிகளில் ஈடுபட்டுள்ள நிறுவனங்களுக்குத் தீவிரமான தாக்கங்களை ஏற்படுத்தக்கூடும் என்பதால், ஆரம்பம் முதலே இந்த மசோதாவைத் திரும்பப் பெற வேண்டும் என்று வலியுறுத்தியதாக அவர் சுட்டிக்காட்டுகித்தார். மேலும், மாற்று வழியாகத் தங்களது கருத்துகள் மற்றும் பரிந்துரைகளை நாடாளுமன்றத்தின் முன் வைக்க வழிவகை செய்யும் வகையில், மசோதாவை கூட்டு நாடாளுமன்றக் குழுவிற்கு அனுப்ப வேண்டும் என்றும் தாங்கள் கோரியிருந்ததை அவர் நினைவுகூர்ந்தார்.

கடந்த காலப் போராட்டங்களும் ஜனநாயக முன்னெடுப்புகளும்:
கடந்த பல மாதங்களாகத் தங்களது அமைப்பு மேற்கொண்ட பிரச்சாரம் அமைதியானதாகவும், ஜனநாயக ரீதியானதாகவும், அரசியலமைப்புச் சட்டத்திற்கு உட்பட்டதாகவும் இருந்து வந்துள்ளதை பி.வில்சன் தனது அறிக்கையில் பட்டியலிட்டுள்ளார்:

ஏப்ரல்: அப்போதைய தமிழக முதலமைச்சரும் திமுக தலைவருமான மு.க. ஸ்டாலின், மசோதாவை உடனடியாகத் திரும்பப் பெறுமாறு பிரதமருக்குக் கடிதம் எழுதியதையும், ஏப்ரல் 16ஆம் தேதி டெல்லியில் நடைபெற்ற முக்கியமான தேசிய ஆலோசனைக் கூட்டத்திற்குத் தலைமை தாங்கியதையும் அவர் சுட்டிக்காட்டினார்.

தேசிய இணையவழி மற்றும் தலைவர்கள் ஆலோசனைக் கூட்டங்கள்:

நாடு முழுவதிலுமிருந்து 150-க்கும் மேற்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள், திருச்சபைத் தலைவர்கள் மற்றும் கிறிஸ்தவ அமைப்புகளின் பிரதிநிதிகள் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டங்களும், ஜூன் 17 அன்று நடைபெற்ற தேசியத் தலைவர்கள் கூட்டமும் நடத்தப்பட்டன.

தேசிய பிரார்த்தனை மற்றும் எதிர்ப்பு நாள்:

ஜூன் 28 அன்று இந்தியா முழுவதும் உள்ள தேவாலயங்கள், கிறிஸ்தவ குடும்பங்கள் மற்றும் மிஷன் அமைப்புகள் தேசிய பிரார்த்தனை மற்றும் உண்ணாநோன்பைக் கடைப்பிடித்தன. அதனைத் தொடர்ந்து ஜூலை 3 அன்று நாடு தழுவிய தேசிய எதிர்ப்பு தினம் அனுசரிக்கப்பட்டு, அமைதியான ஆர்ப்பாட்டங்கள் மற்றும் கையெழுத்து இயக்கங்கள் மூலம் பிரதமருக்கு அனுப்ப மனுக்கள் சமர்ப்பிக்கப்பட்டன.

ஜூலை 20: புதுடெல்லியில் உள்ள இந்தியா சர்வதேச மையத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள், சுகாதாரத் துறை வல்லுநர்கள், கல்வியாளர்கள் மற்றும் கிறிஸ்தவ அமைப்புகளின் தலைவர்கள் பங்கேற்ற தேசிய ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

மத்திய உள்துறை அமைச்சர் சந்திப்பு மற்றும் நன்றி:
தொடர்ந்து, கடந்த ஆகஸ்ட் 6ஆம் தேதி பி.வில்சன் தலைமையில் இந்தியாவில் உள்ள பல்வேறு கிறிஸ்தவப் பிரிவுகளைச் சேர்ந்த மதத் தலைவர்கள், அரசு சாரா நிறுவனங்கள் மற்றும் தொண்டு நிறுவனங்களின் பிரதிநிதிகள் அடங்கிய குழு, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை நேரில் சந்தித்து, திருத்தச் சட்டத்தால் பாதிக்கப்படும் கிறிஸ்தவ சமூகத்தினர் மற்றும் நிறுவனங்களின் கவலைகளை விரிவாக எடுத்துரைத்தது.
உள்துறை அமைச்சருடனான சந்திப்பைத் தொடர்ந்து, கிறிஸ்தவ சமூகத் தலைவர்களுடன் இணைந்து திமுக தலைவர் மு.க. ஸ்டாலினைச் சந்தித்து, சிறுபான்மையினருக்குத் தொடர்ந்து ஆதரவுக் குரல் கொடுத்து வருவதற்காக அக்குழு தங்களது நன்றியைத் தெரிவித்துக் கொண்டது.

பிரதான கோரிக்கையில் உறுதி:
மசோதாவை முழுமையாகத் திரும்பப் பெற வேண்டும் என்ற தங்களது பிரதான கோரிக்கையில் கூட்டு நடவடிக்கை மன்றம் உறுதியாக உள்ளது. அதேவேளையில், மசோதா நாடாளுமன்றக் கூட்டுக்குழுவிற்கு அனுப்பப்பட்டிருப்பதை வரவேற்கும் பி.வில்சன், இந்தக் கடினமான மாதங்களில் தங்களுடன் இணைந்து நின்ற ஒவ்வொரு தலைவருக்கும், அரசியல் கட்சிகளுக்கும், நிறுவனங்களுக்கும் மற்றும் தனிநபர்களுக்கும் தனது ஆழ்ந்த நன்றியைத் தெரிவித்துக்கொள்வதாகத் தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர்: நீட் மற்றும் மாணவர் போராட்டங்கள் விவகாரத்தில் அமித்ஷா தீவிர விவாதத்திற்கு அழைப்பு!

MUST READ