Homeசெய்திகள்மாவட்டம்பழனியில் 'ரீ-செக்' செய்யப்பபடும் கோயில் சொத்துக்கள்.. பொன்மணி IAS கொடுத்த மாஸ் அப்டேட்!

பழனியில் ‘ரீ-செக்’ செய்யப்பபடும் கோயில் சொத்துக்கள்.. பொன்மணி IAS கொடுத்த மாஸ் அப்டேட்!

-

- Advertisement -

ஆக்கிரமிப்புகள் மற்றும் சட்டவிரோதப் பெயர் மாற்றங்களைத் தடுக்க அரசு அதிரடி! பல நூறு கோடி மதிப்பிலான சொத்துகளை ‘ரீ-செக்’ செய்ய ஒருங்கிணைப்புக் குழு அமைப்பு!பழனியில் 'ரீ-செக்' செய்யப்பபடும் கோயில் சொத்துக்கள்.. பொன்மணி IAS கொடுத்த மாஸ் அப்டேட்!

பழனி அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயிலுக்குச் சொந்தமான பல நூறு கோடி ரூபாய் மதிப்பிலான நிலங்கள், சட்டவிரோதப் பெயர் மாற்றங்கள் மற்றும் ஆக்கிரமிப்புகளில் சிக்கி வருகின்றன. இந்நிலையில், திருக்கோயில் சொத்துகளை முழுமையாகப் பாதுகாக்கும் பொருட்டு, தமிழக அரசு எடுத்துள்ள அதிரடி முடிவின் அடிப்படையில் அமைக்கப்பட்டுள்ள புதிய ஆய்வுக் குழுவினர் இன்று பழனியில் தீவிர ஆலோசனையையும் நேரடி ஆய்வையும் மேற்கொண்டுள்ளனர்.

we-r-hiring

ஐ.ஏ.எஸ் அதிகாரி தலைமையில் உயர்நிலைக் கூட்டம்
திருக்கோயில் சொத்துகளை முழுமையாக ஆய்வு செய்து மீட்டெடுப்பதற்காக இந்து சமய அறநிலையத்துறை, வருவாய்த்துறை, நில அளவைத்துறை அதிகாரிகள் மற்றும் கோயில் வட்டாட்சியர் ஆகியோரை உள்ளடக்கிய பிரத்யேக ஒருங்கிணைப்புக் குழு (Coordination Committee) அமைக்கப்பட்டுள்ளது. இச்சிறப்புக் குழுவின் தலைவரான பொன்மணி ஐ.ஏ.எஸ் தலைமையில் அதிகாரிகள் குழுவினர் இன்று பழனி திருக்கோயில் தேவஸ்தான தலைமை அலுவலகத்திற்கு வருகை தந்தனர். அங்கு நடைபெற்ற உயர்நிலைக் கூட்டத்தில், கோயில் சொத்துகள், கணக்கில் உள்ள வருவாய் இனங்கள், கணக்கில் வராத சொத்துகள் மற்றும் சட்டவிரோதப் பெயர் மாற்றங்கள் குறித்து விரிவாக ஆலோசிக்கப்பட்டது.

நிலங்கள் மற்றும் கட்டடங்கள் நேரில் ஆய்வு
ஆலோசனைக்குப் பின்னர், பொன்மணி ஐ.ஏ.எஸ் தலைமையிலான குழுவினர் பழனி பிரதான திருக்கோயில் மற்றும் அதனைச் சார்ந்த உப கோயில்களுக்குச் சொந்தமான நிலங்கள், கட்டடங்களை நேரில் சென்று பார்வையிட்டு விரிவான கள ஆய்வை மேற்கொண்டனர்.பழனியில் 'ரீ-செக்' செய்யப்பபடும் கோயில் சொத்துக்கள்.. பொன்மணி IAS கொடுத்த மாஸ் அப்டேட்!“துறைகளின் கூட்டு அமர்வு மூலம் சொத்துகள் மீட்டெடுக்கப்படும்” – பொன்மணி ஐ.ஏ.எஸ் பேட்டி!
ஆய்வுக்குப் பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய பொன்மணி ஐ.ஏ.எஸ் தெரிவித்ததாவது, “அறநிலையத்துறை வசம் ஏற்கனவே அனைத்துக் கோயில்களுக்குமான சொத்துப் பதிவேடுகள் (Property Registers) உள்ளன. தற்போது இந்தக் குழு மூலமாக அனைத்துச் சொத்துகளையும் மீண்டும் ஒருமுறை ‘ரீ-செக்’ (Re-check) செய்து சரிபார்க்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.  நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் உள்ள கோயில் சொத்துகளைப் பொறுத்தவரை, நீதிமன்றத் தீர்ப்பு மற்றும் உத்தரவுகள் வரும்போது அதற்கேற்பப் பராமரிக்கப்பட்டு சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்கப்படும்.

இந்த ஆய்வுக் குழுவானது அறநிலையத்துறை, வருவாய்த்துறை (RDO), நில அளவைத்துறை மற்றும் கோயில் வட்டாட்சியர் உள்ளிட்டோர் அடங்கிய ஒரு ஒருங்கிணைப்புக் குழுவாகும். இதன் மூலம் துறைகளுக்கிடையேயான கூட்டு அமர்வுகள் (Joint Sitting) நடத்தப்பட்டு, கோயில் சொத்துகளை விரைவாக மீட்டெடுக்கத் தேவையான அனைத்து நடவடிக்கைகளும் ஒருங்கிணைந்து வேகப்படுத்தப்படும்.” என்று அவர் உறுதியளித்தார். அரசு மற்றும் அதிகாரிகளின் இந்த அதிரடி நடவடிக்கையால், பழனி தண்டாயுதபாணி கோயிலின் ஆக்கிரமிக்கப்பட்ட சொத்துகள் விரைவில் மீட்கப்படும் எனப் பக்தர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

சிவகாசி அருகே பயங்கரம்: பட்டாசு ஆலையில் வெடி விபத்து – 3 தொழிலாளர்கள் பரிதாப பலி!

 

MUST READ