Homeசெய்திகள்தமிழ்நாடுதமிழ்நாட்டின் கழுத்தை நெரிக்கும் அரசியல் மாயைகள்! – மருது அழகராஜ் பேட்டியால் வெடித்த அரசியல் புயல்!

தமிழ்நாட்டின் கழுத்தை நெரிக்கும் அரசியல் மாயைகள்! – மருது அழகராஜ் பேட்டியால் வெடித்த அரசியல் புயல்!

-

- Advertisement -

தமிழக அரசியலில் அனல் பறக்கும் விவாதங்களை ஏற்படுத்தியுள்ள தவெக மற்றும் திமுக இடையேயான மோதல் போக்குகள் குறித்து, திமுகவின் மாநில செய்தித் தொடர்பு குழு துணைத் தலைவர் மருது அழகராஜ் அளித்துள்ள பேட்டி பெரும் புயலைக் கிளப்பியுள்ளது.தமிழ்நாட்டின் கழுத்தை நெரிக்கும் அரசியல் மாயைகள்! – மருது அழகராஜ் பேட்டியால் வெடித்த அரசியல் புயல்!

சுதந்திர தின விழாவில் முதலமைச்சர் ஆற்றிய உரை, மக்களின் எதிர்பார்ப்பை முழுமையாக ஏமாற்றிவிட்டதாக மருது அழகராஜ் சாடியுள்ளார். தந்தை பெரியார் மற்றும் முத்தமிழறிஞர் கலைஞர் ஆகியோரின் வரலாற்றையும் உரிமைகளையும் சுட்டிக்காட்டத் தவறிய இந்த உரை, அரசியல் முதிர்ச்சியற்ற தன்மையைக் காட்டுவதாக அவர் விமர்சித்துள்ளார். மேலும், “என்னை விட்டுவிடாதீர்கள்” என்ற வார்த்தைகளின் மூலமாகவே, மக்கள் தன்னைவிட்டு விலகிச் செல்வதை முதலமைச்சர் உணர்ந்துவிட்டதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

we-r-hiring

நடுத்தர மக்களின் மீதான மின்கட்டணச் சுமை
ஆட்சிப் பொறுப்பேற்ற சில மாதங்களிலேயே மின்கட்டணம் மற்றும் சொத்து வரி உயர்வு போன்ற அதிர்ச்சிகளை மக்கள் சந்திக்க நேரிட்டுள்ளதாக அவர் குற்றம்சாட்டியுள்ளார். கொரோனா கால பொருளாதாரத் தளர்வுகளிலிருந்து மீண்டு வந்த எளிய மக்களை வாட்டி வதைக்கும் இந்த நடவடிக்கைகள், மாநிலத்தின் நிர்வாகத் திறமையின்மையைக் காட்டுவதாக அவர் கடுமையாக விமர்சித்துள்ளார்.

தமிழ்நாட்டின் கழுத்தை நெரிக்கும் அரசியல் மாயைகள்! – மருது அழகராஜ் பேட்டியால் வெடித்த அரசியல் புயல்!

தவெக – பாஜக ரகசியக் கூட்டணி நாடகம்
தமிழக வெற்றிக்கழகம் (தவெக) என்பது பாஜகவின் நேரடிப் பின்னணியில் இயங்கும் ஒரு “டெஸ்ட் கியூப் பேபி” (Test-tube baby) என்று மருது அழகராஜ் பகிரங்கமாக வர்ணித்துள்ளார். தவெகவின் நிர்வாகத் தேர்வு, பின்னணி வியூகங்கள் மற்றும் கட்சியில் இணைந்த முன்னாள் அதிமுக தலைவர்களின் நகர்வுகள் என அனைத்தின் பின்ேயும் பாஜகவின் மறைமுக கரங்கள் இயங்குவதாக அவர் திடுக்கிடும் தகவல்களை வெளிப்படுத்தியுள்ளார்.

குதிரை பேரமும் அதிகார அரசியலும்
சட்டப்பேரவையில் பலத்தை நிரூபிக்க எதிர்க்கட்சிகள் நடத்தும் முயற்சிகளும், எம்.எல்.ஏக்களை வளைக்கும் குதிரை பேரங்களும் தமிழக அரசியலைச் சீரழித்து வருவதாக அவர் குற்றம்சாட்டியுள்ளார். இந்த முறைகேடுகளை எல்லாம் ஆளுநர் மௌனமாக வேடிக்கைப் பார்ப்பதுடன், பின்னணியிலிருந்து சில சக்திகள் தவெகவை முழுமையாகக் கட்டுப்படுத்த முயன்று வருவதாகவும் அவர் எச்சரித்துள்ளார்.

“ITI மாணவர் சேர்க்கைக்கான கால அவகாசம் நீட்டிப்பு!” – ஆகஸ்ட் 31 வரை விண்ணப்பிக்கலாம் எனத் தமிழக அரசு அறிவிப்பு!

MUST READ