Homeசெய்திகள்இந்தியாலக்னோவில் கொடூரம்: மனைவியையும் சகோதரியையும் சுட்டுக்கொன்று வங்கி அதிகாரி தற்கொலை!

லக்னோவில் கொடூரம்: மனைவியையும் சகோதரியையும் சுட்டுக்கொன்று வங்கி அதிகாரி தற்கொலை!

-

- Advertisement -

உத்தர பிரதேச மாநிலம் லக்னோவில், குடும்பத் தகராறு காரணமாக வங்கியின் மூத்த அதிகாரி ஒருவர், தனது மனைவி மற்றும் சகோதரியைத் துப்பாக்கியால் சுட்டுக்கொன்றுவிட்டுத் தானும் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

we-r-hiring

சம்பவம் நடந்தது எப்படி?

எஸ்.பி.ஐ (SBI) வங்கியில் அதிகாரியாகப் பணியாற்றி வந்த மனஸ் பாஜ்பாய் என்பவருக்கும், ஐ.சி.ஐ.சி.ஐ (ICICI) வங்கியில் மேலாளராகப் பணியாற்றிய அவரது மனைவி திவ்யா மிஸ்ராவுக்கும் இடையே ஏற்பட்ட குடும்பத் தகராறு காரணமாக இருவரும் கடந்த ஓராண்டாகப் பிரிந்து வாழ்ந்து வந்தனர். இவர்களது விவாகரத்து வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது.

இந்நிலையில் நேற்று காலை, திவ்யா பணிபுரியும் ஐ.சி.ஐ.சி.ஐ வங்கிக்குச் சென்ற மனஸ், அவரைத் துப்பாக்கியால் சரமாரியாகச் சுட்டார். இதில் திவ்யா சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். பின்னர் வீட்டுக்குத் திரும்பிய மனஸ், உடல்நலம் பாதிக்கப்பட்டிருந்த தனது சகோதரியையும் சுட்டுக்கொலை செய்துவிட்டு, தன்னைத்தானே சுட்டுத் தற்கொலை செய்துகொண்டார்.

வாட்ஸ்அப் பதிவில் திடுக்கிடும் தகவல்கள்:

தற்கொலை செய்துகொள்வதற்கு முன்பாக மனஸ் தனது வாட்ஸ்அப்பில் பதிவுசெய்த குறிப்பு காவல்துறையினரால் கைப்பற்றப்பட்டுள்ளது. அதில்:

“என் மனைவி என்னை ஏமாற்றியதால் அவரை சுட்டுக்கொலை செய்தேன். இப்போது என் சகோதரியை கொலை செய்துவிட்டு, நானும் தற்கொலை செய்துகொள்ள போகிறேன். என்ன நடந்தது என்பது என் மனைவியின் சகோதரி பிராக்யாவுக்கு தெரியும்.”

என அவர் குறிப்பிட்டிருந்தார். இதில் திவ்யாவின் சகோதரி பிராக்யா பிரபல யூடியூபர் என்பது குறிப்பிடத்தக்கது. இதுகுறித்து காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தெலங்கானாவில் சோகம்: விவசாயக் கிணற்றில் கார் பாய்ந்து ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் உயிரிழப்பு!

MUST READ