Homeசெய்திகள்தமிழ்நாடு"மத்திய அரசுடன் உடனே பேசுங்க!" - கைவிடப்பட்ட கோவை மெட்ரோ திட்டத்தை மீண்டும் கொண்டு வர...

“மத்திய அரசுடன் உடனே பேசுங்க!” – கைவிடப்பட்ட கோவை மெட்ரோ திட்டத்தை மீண்டும் கொண்டு வர வேலுமணி வலியுறுத்தல்!

-

- Advertisement -

2011-ஆம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பைச் சுட்டிக்காட்டி கோவைMetro ரயில் திட்டம் கைவிடப்பட்டுள்ளதாகச் சுட்டிக்காட்டிய அதிமுக உறுப்பினர் எஸ்.பி.வேலுமணி, கோவை மற்றும் மதுரை நகரங்களுக்கு மெட்ரோ ரயில் திட்டத்தைக் கொண்டு வர அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் எனச் சட்டப்பேரவையில் வலியுறுத்தினார்."மத்திய அரசுடன் உடனே பேசுங்க!" - கைவிடப்பட்ட கோவை மெட்ரோ திட்டத்தை மீண்டும் கொண்டு வர வேலுமணி வலியுறுத்தல்!

பேரவையில் அதிமுக எல்.எம்.ஏ வேலுமணி முன்வைத்த வாதங்கள்

we-r-hiring
  • மக்கள் தொகை தவறான கணக்கீடு: 20 லட்சம் பேருக்கும் குறைவான மக்கள் தொகை உள்ளது எனக் காரணம் கூறி கோவை மெட்ரோ ரயில் திட்டம் கைவிடப்பட்டுள்ளது. 2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ஆனால், இன்று கோவையின் மக்கள் தொகை சுமார் 45 லட்சத்தைத் தாண்டியுள்ளது.

  • மற்ற மாநில நகரங்களுடன் ஒப்பீடு: வடமாநிலங்களான இந்தூர், ஆக்ரா, போபால் மற்றும் பாட்னா ஆகிய நகரங்களில் 20 லட்சத்திற்கும் குறைவான மக்கள் தொகை இருந்தபோதிலும் அங்கு மெட்ரோ ரயில் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.

  • அரசு நடவடிக்கை எடுக்கக் கோரிக்கை: எனவே, தமிழ்நாடு அரசு மத்திய அரசுடன் உடனடியாகப் பேச்சுவார்த்தை நடத்தி, கோவை மற்றும் மதுரை ஆகிய இரு முக்கிய நகரங்களுக்கும் மெட்ரோ ரயில் திட்டத்தை விரைவாகக் கொண்டு வரத் தேவையான முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும்.

தொழில் நகரமான கோவையின் போக்குவரத்து நெரிசலைக் குறைக்கவும், பொருளாதார வளர்ச்சியை மேம்படுத்தவும் மெட்ரோ திட்டம் மிகவும் அவசியம் என அவையில் சுட்டிக்காட்டப்பட்டது.

சட்டப்பேரவையில் சபாநாயகருக்கு எஸ்பி வேலுமணி பாராட்டு: செங்கோட்டையன், கே.என்.நேரு இடையே காரசார விவாதம்

MUST READ