தமிழகத்தில் உள்ள அரசுப் பள்ளிப் கட்டிடங்கள் அவற்றின் பாதுகாப்புக் தன்மையின் அடிப்படையில் மூன்று வண்ணங்களில் தரம் பிரிக்கப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஆதவ் அர்ஜூனா சட்டப்பேரவையில் தெரிவித்துள்ளார்.
பள்ளிக் கட்டிடங்களின் தரம் மற்றும் மாணவர்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் நோக்கில் இந்த புதிய நடைமுறை கொண்டு வரப்படுவதாக அவர் விளக்கம் அளித்துள்ளார்.

மூன்று வண்ணங்கள் – முத்தான திட்டங்கள்
சிவப்பு நிற ஸ்டிக்கர் (அபாயகரமானவை): பயன்பாட்டிற்கு லாயக்கற்ற, மிகவும் மோசமான நிலையிலுள்ள பள்ளிப் கட்டிடங்களில் ‘சிவப்பு நிற ஸ்டிக்கர்’ ஒட்டப்பட்டு, அவை உடனடியாகச் சீல் வைக்கப்படும்.
மஞ்சள் நிற ஸ்டிக்கர் (பராமரிப்பு தேவைப்படுபவை): சிறு பழுதுகள் மற்றும் பராமரிப்புப் பணிகள் தேவைப்படும் கட்டிடங்களுக்கு ‘மஞ்சள் நிற ஸ்டிக்கர்’ ஒட்டப்பட்டு, விரைவாகச் சீரமைக்கும் பணிகள் மேற்கொள்ளப்படும்.
பச்சை நிற ஸ்டிக்கர் (முழுப் பாதுகாப்பு): அடுத்த 5 ஆண்டுகளுக்கு எந்தவிதமான ஆபத்தோ அல்லது பராமரிப்புப் பிரச்சினைகளோ இல்லாத வலுவான கட்டிடங்களுக்கு ‘பச்சை நிற ஸ்டிக்கர்’ ஒட்டப்படும்.
தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து அரசுப் பள்ளிகளிலும் கட்டிடங்களின் நிலை குறித்து தீவிரமாகக் கணக்கெடுக்கப்பட்டு, இந்த வண்ணங்கள் ஒதுக்கப்படும் என்றும் அமைச்சர் அவையில் உறுதியளித்துள்ளார். மாணவர்களின் உயிர்ப் பாதுகாப்பிற்கு முன்னுரிமை அளிக்கும் அரசின் இந்த நடவடிக்கை பரவலான வரவேற்பைப் பெற்றுள்ளது.
வழக்குகள் முடியும் வரை இடைத்தேர்தல் இல்லை: சென்னை உயர் நீதிமன்றத்தில் தேர்தல் ஆணையம் விளக்கம்
