Homeசெய்திகள்தமிழ்நாடுசில இடத்துல கட்டாயப்படுத்தி தான் காசு வாங்கி இருக்காங்க": சட்டப்பேரவையில் நிதியமைச்சர் மரிய வில்சன் அதிரடி...

சில இடத்துல கட்டாயப்படுத்தி தான் காசு வாங்கி இருக்காங்க”: சட்டப்பேரவையில் நிதியமைச்சர் மரிய வில்சன் அதிரடி உரை – கொந்தளித்த பேரவை

-

- Advertisement -

தமிழக நிதி அமைச்சர் மரிய வில்சன், “சில இடங்களில் கட்டாயப்படுத்தி தான் வசூல் செய்யப்பட்டுள்ளது என்றும், அதற்குத் தானே சாட்சி” என்றும் சட்டப்பேரவையில் மேஜையைத் தட்டி அதிரடியாகப் பேசிய சம்பவம், பேரவை வரலாற்றிலேயே பெரும் காரசாரமான விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.சில இடத்துல கட்டாயப்படுத்தி தான் காசு வாங்கி இருக்காங்க": சட்டப்பேரவையில் நிதியமைச்சர் மரிய வில்சன் அதிரடி உரை – கொந்தளித்த பேரவை

சட்டப்பேரவையில் நிதியமைச்சரின் ஓபன் டாக்
பேரவைக் கூட்டத்தொடரில் மானியக் கோரிக்கை மற்றும் நிதிநிலை தொடர்பான விவாதத்தின் போது குறுக்கிட்டுப் பேசிய நிதியமைச்சர் மரிய வில்சன், நிர்வாகத்தில் நிலவும் சில முறைகேடுகள் குறித்து எந்தவித ஒளிவுமறைவுமின்றிப் பேசினார்.

we-r-hiring

அவர் பேசுகையில், “நான் இந்த விஷயத்தைப் பேரவையில் பேசக்கூடாது என்றுதான் நினைத்தேன். ஆனால் வேறு வழி தெரியவில்லை. சில இடங்களில் கட்டாயப்படுத்தி தான் காசு வாங்கி இருக்கிறார்கள். அவ்வாறு கட்டாயப்படுத்தி வசூல் செய்ததற்கு நானே சாட்சியாக இருக்கிறேன். எதுக்கு எவ்ளோ கொடுத்தேன் என்பதைப் பட்டியலிட்டு நானே சொல்கிறேன்” என்று சட்டமன்றத்திலேயே போட்டு உடைத்தார்.

எதிர்க்கட்சிகள் கடும் அமளி
மாநிலத்தின் நிதியமைச்சரே சட்டப்பேரவைக்குள் நின்று, கட்டாய வசூல் மற்றும் பணப்பரிமாற்றம் தொடர்பாகத் தனது சொந்த அனுபவத்தையே சான்றாக வைத்துப் பேசியதால், எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அனைவரும் உடனடியாக எழுந்து நின்று கடும் முழக்கங்களை எழுப்பினர். “நிதியமைச்சரின் இந்தப் பேச்சு அரசின் நிர்வாகச் சீர்கேட்டையே அம்பலப்படுத்துகிறது” எனக் கூறி எதிர்க்கட்சியினர் பேரவைக்குள் கடும் கூச்சலில் ஈடுபட்டதால் சிறிது நேரம் அமளி நிலவியது.

சபாநாயகர் தலையீடு
இதனைத் தொடர்ந்து சபாநாயகர் தலையிட்டு, உறுப்பினர்களை அமைதி காக்குமாறு கேட்டுக்கொண்டார். அமைச்சரின் உரை மற்றும் பேரவை உறுப்பினர்களின் எதிர்ப்புகள் குறித்து அவைக் குறிப்புகளை ஆய்வு செய்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று அறிவித்ததைத் தொடர்ந்து பேரவை நடவடிக்கைகள் மீண்டும் தொடர்ந்தன.

“மத்திய அரசுடன் உடனே பேசுங்க!” – கைவிடப்பட்ட கோவை மெட்ரோ திட்டத்தை மீண்டும் கொண்டு வர வேலுமணி வலியுறுத்தல்!

MUST READ