Homeசெய்திகள்உலகம்16 வயதுக்கு உட்பட்ட சிறுவர்களுக்கு சோஷியல் மீடியா தடை: நியூசிலாந்து நாடாளுமன்றத்தில் மசோதா தாக்கல்!

16 வயதுக்கு உட்பட்ட சிறுவர்களுக்கு சோஷியல் மீடியா தடை: நியூசிலாந்து நாடாளுமன்றத்தில் மசோதா தாக்கல்!

-

- Advertisement -

நியூசிலாந்தில் 16 வயதுக்கு உட்பட்ட சிறுவர்கள் சமூக ஊடகத் தளங்களைப் பயன்படுத்துவதைத் தடை செய்வதற்கான சட்ட முன்மொழிவு நாடாளுமன்றத்தில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

we-r-hiring

நியூசிலாந்து நாடாளுமன்றத்தில் பிரதமர் கிறிஸ்டோபர் லக்சன், 16 வயதுக்கு உட்பட்ட சிறுவர்கள் சமூக ஊடகத் தளங்களைப் பயன்படுத்துவதைத் தடை செய்வதற்கான சட்ட முன்மொழிவை அறிமுகம் செய்து வைத்தார். அப்போது பேசிய பிரதமர் லக்சன், ‘‘இளம் தலைமுறையினருக்குச் சமூக ஊடகத் தளங்கள் தீங்கு விளைவிக்கும் உள்ளடக்கம், அடிமையாக்கும் தொழில்நுட்பம் மற்றும் அவர்களால் கையாள முடியாத அழுத்தங்களுக்கு ஆளாக்குகின்றன. இது அவர்களின் குடும்ப வாழ்க்கை, மனநலம், தூக்கம் மற்றும் கல்வியைப் பாதிக்கிறது” என்றார்.

பிரதமர் வட்டாரத் தகவலின்படி இந்த முன்மொழிவு இன்ஸ்டாகிராம், டிக்டாக், ஸ்னாப்சாட், பேஸ்புக் உள்ளிட்ட சமூக ஊடகத் தளங்கள், பயனர்கள் 16 வயதுக்கு மேற்பட்டவர்களா என்பதைச் சரிபார்ப்பதற்கு நியாயமான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறது.

எனினும் இந்த முன்மொழிவு சட்டமாவதற்குத் தேவையான ஆதரவை பிரதமர் லக்சன் இன்னும் பெறவில்லை. லக்சனின் கூட்டணி அரசில் உள்ள மூன்று கட்சிகளில் இரண்டு கட்சிகள் இதற்கு எதிராக வாக்களிக்க இருப்பதாகக் கூறப்படுகிறது.

அமெரிக்காவின் H-1B விசா கட்டணம் ரூ.98 லட்சமாக உயர்கிறதா? ட்ரம்ப் நிர்வாகத்தின் புதிய திட்டம்!

MUST READ