மத்திய கிழக்கு பகுதியில் பதற்றம் தொடர்ந்து நீடித்து வரும் நிலையில், ஈரானைக் கட்டுப்படுத்தும் நோக்கில் அமெரிக்காவின் டிரம்ப் நிர்வாகம் அந்நாட்டின் மீது கூடுதல் பொருளாதாரத் தடைகளை விதித்துள்ளது. இதற்குத் தகுந்த பதிலடி கொடுக்கத் தாம் முழுமையாகத் தயாராக இருப்பதாக ஈரான் காரசாரமாக எச்சரித்துள்ளது.


அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் நாடுகள் ஈரான் மீது வான்வழித் தாக்குதல்களை நடத்தி 6 மாதங்கள் கடந்துள்ள சூழலில், இப்போரினால் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் மற்றும் எரிபொருள் விலைகள் தொடர்ந்து உயர்ந்து வருகின்றன.
அமெரிக்காவின் புதிய தடைகள் & எச்சரிக்கை:
60 இலக்குகள் மீது தடை: ஈரானின் பொருளாதார உயிர்நாடியை முடக்கும் நோக்கில், அந்நாட்டைச் சேர்ந்த 60 தனிநபர்கள், வர்த்தக நிறுவனங்கள் மற்றும் சரக்குக் கப்பல்கள் மீது புதிய பொருளாதாரத் தடைகளை அமெரிக்க நிதித்துறை அமைச்சர் ஸ்காட் பெசன்ட் அறிவித்துள்ளார்.
டாலர் பரிவர்த்தனைக்குத் தடை: அமெரிக்காவின் எச்சரிக்கையையும் மீறி ஈரானுடன் தொடர்ந்து வர்த்தக உறவில் ஈடுபடும் நாடுகள், சர்வதேச டாலர் பரிவர்த்தனை அமைப்பிலிருந்து (Dollar Transaction System) முற்றிலுமாக நீக்கப்படும் என்றும் அமெரிக்கா அதிரடி எச்சரிக்கை விடுத்துள்ளது.
அமெரிக்காவின் இந்தத் தீவிர பொருளாதார அழுத்தத்திற்கு அஞ்சப்போவதில்லை என்றும், நாட்டின் நலன்களைப் பாதுகாக்க அனைத்து வழிகளிலும் பதிலடி கொடுக்கப்படும் என்றும் ஈரான் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
16 வயதுக்கு உட்பட்ட சிறுவர்களுக்கு சோஷியல் மீடியா தடை: நியூசிலாந்து நாடாளுமன்றத்தில் மசோதா தாக்கல்!
