நேபாளத்தில் நிலவிவரும் பெருவெள்ளப் பேரிடரில் சிக்கியுள்ள தமிழர்களின் பாதுகாப்பு மற்றும் மீட்பு நடவடிக்கைகள் குறித்து, தமிழகப் பிரதிநிதிகள் மற்றும் உயர் அதிகாரிகள் டெல்லியில் உள்ள மத்திய வெளிநாட்டுச் செயலர் விக்ரம் மிஸ்ரி ஐஏஎஸ் அவர்களைச் சந்தித்து ஆலோசனையில் ஈடுபட்டுள்ளனர்.


சந்திப்பில் பங்கேற்றவர்கள் இக்கூட்டத்தில் தமிழகத்தின் சார்பில் பின்வரும் அமைச்சர்களும் உயர் அதிகாரிகளும் கலந்துகொண்டனர்:
ஆதவ் அர்ஜுனா
ராஜ்மோகன்
வினோத்
தென்னரசு
வெங்கட்நாராயணா (தமிழக அரசு டெல்லி பிரதிநிதி)
ஜெயா ஐஏஎஸ் (முதன்மை குடியிருப்பு ஆணையர்)
சதீஷ் ஐஏஎஸ் (NRT ஆணையர்)

மீட்புப் பணிகள் மற்றும் நடவடிக்கைகள் நேபாளத்தில் வெள்ளம் மற்றும் பனிச்சிகர விபத்தில் பாதிக்கப்பட்டுள்ள தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்களைத் தொடர்புகொள்வது, அவர்களை விரைவாக மீட்டுப் பாதுகாப்பாகத் தமிழகம் அழைத்து வருவது குறித்தும் மத்திய வெளிநாட்டுச் செயலர் விக்ரம் மிஸ்ரியுடன் இந்தக் குழுவினர் விரிவான ஆலோசனை மேற்கொண்டனர். மத்திய அரசின் வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் ஒருங்கிணைப்போடு மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளைத் தீவிரப்படுத்துவது குறித்து ஆலோசிக்கப்பட்டது.
