நாட்டின் பல்வேறு பகுதிகளில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், இன்று (செப்டம்பர் 5) பல மாநிலங்களில் கனமழை மற்றும் இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
![]()

60 கி.மீ. வேகத்தில் காற்று!
மழையுடன் கூடிய இடியுடன் கூடிய புயல் நிலை ஏற்படும் பகுதிகளில் மணிக்கு 40 முதல் 50 கி.மீ. வேகத்தில் காற்று வீசக்கூடும். சில இடங்களில் காற்றின் வேகம் 60 கி.மீ. வரை அதிகரிக்க வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
டெல்லி, உத்தரப் பிரதேசம், பீகார், ஜார்க்கண்ட், உத்தரகாண்ட், இமாச்சலப் பிரதேசம், ஜம்மு காஷ்மீர், பஞ்சாப், ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம் உள்ளிட்ட வடக்கு மற்றும் மத்திய இந்தியாவின் பல பகுதிகளில் கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
தமிழகத்திலும் மழைக்கு வாய்ப்பு
தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இன்று இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளதாக IMD தெரிவித்துள்ளது.
மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம், விருதுநகர் மற்றும் மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மிதமானது முதல் கனமழை வரை பெய்யக்கூடும். இந்தப் பகுதிகளில் மணிக்கு 40–50 கி.மீ. வேகத்தில் பலத்த காற்று வீசும் வாய்ப்பும் உள்ளது.
தமிழகத்தின் பிற பகுதிகளில் சில இடங்களில் லேசான மழையுடன் இடி, மின்னல் ஏற்படலாம்.
பொதுமக்கள் கவனத்திற்கு
பலத்த காற்று வீசும் நேரங்களில் மரங்கள், மின்கம்பங்கள் மற்றும் விளம்பரப் பலகைகள் அருகில் செல்வதை பொதுமக்கள் தவிர்க்க வேண்டும். இடியுடன் கூடிய மழை பெய்யும்போது திறந்தவெளி மற்றும் நீர்நிலைகளுக்கு அருகில் இருப்பதை தவிர்ப்பது பாதுகாப்பானது.
வடக்கு, மத்திய மற்றும் கிழக்கு இந்தியாவின் பல பகுதிகளில் இன்றும் மழை தொடரும் நிலையில், சில பகுதிகளில் மிக கனமழைக்கும் வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மழை எச்சரிக்கை நீடிப்பதால் பொதுமக்கள் வானிலை நிலவரத்தை தொடர்ந்து கவனித்து, தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.
இன்று 23 மாநிலங்களுக்கு மழை Warning! 75 கி.மீ வேகத்தில் காற்று – வானிலை மையம் எச்சரிக்கை
