கோவை பீளமேடு பகுதியில் உள்ள பிரபல தனியார் பாரில் மதுப்பிரியர்களுக்கு இடையே ஏற்பட்ட திடீர் மோதலில் பிளாஸ்டிக் நாற்காலிகளால் தாக்கி கொண்டதில் 3 பேர் பலத்த காயமடைந்தனர்.
பாரில் ஏற்பட்ட திடீர் தகராறு – கோவை பீளமேடு தண்ணீர் பந்தல் சாலையில் ’11 to 11′ என்ற தனியார் பார் இயங்கி வருகிறது. இங்கு வழக்கம் போல் நேற்று ஏராளமானோர் மது அருந்திக் கொண்டிருந்தனர். அப்போது, அங்கு வந்த சில மதுப்பிரியர்களுக்கு இடையே திடீரென வாய்த்தகராறு ஏற்பட்டுள்ளது.

நாற்காலிகளை வீசித் தாக்குதல் – ஆரம்பத்தில் சாதாரண வாக்குவாதமாகத் தொடங்கிய இந்தப் பிரச்சனை, சிறிது நேரத்தில் எல்லை மீறி மோதலாக மாறியது.
ஆத்திரமடைந்த இரு தரப்பினரும் அங்கிருந்த பிளாஸ்டிக் நாற்காலிகளை எடுத்து பரஸ்பரம் ஒருவர் மீது ஒருவர் வீசி பயங்கரமாகத் தாக்கிக் கொண்டனர்.
இந்தத் திடீர் மோதலால் பார் வளாகமே போர்க்களம் போலக் காட்சியளித்தது.
இந்த மோதலில் 3 பேருக்குப் பலத்த காயம் ஏற்பட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
வீடியோ வைரல் & போலீஸ் விசாரணை
இந்த மோதல் தொடர்பான காட்சிகளை அங்கிருந்த சிலர் தங்கள் செல்போனில் படம்பிடித்து சமூக வலைதளங்களில் பதிவிட்டனர்.
தற்போது அந்த வீடியோ காட்சிகள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.
இதனிடையே, சமூக வலைதளங்களில் வெளியான வீடியோ பதிவுகளைக் கொண்டு, மோதலில் ஈடுபட்ட நபர்கள் யார் என்பது குறித்து பீளமேடு காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
