Homeசெய்திகள்இந்தியாபிரதமர் மோடியின் ராஜதந்திர வெற்றி! BRICS உச்சி மாநாட்டில் இந்தியாவுக்கு கிடைத்த முக்கிய பலன்கள் என்ன?

பிரதமர் மோடியின் ராஜதந்திர வெற்றி! BRICS உச்சி மாநாட்டில் இந்தியாவுக்கு கிடைத்த முக்கிய பலன்கள் என்ன?

-

- Advertisement -

இந்தியா தலைமையில் நடைபெற்ற 18-வது BRICS உச்சி மாநாடு பல்வேறு முக்கிய முடிவுகளுடன் நிறைவடைந்துள்ளது. செப்டம்பர் 12 மற்றும் 13-ம் தேதிகளில் புதுடெல்லியில் நடைபெற்ற இந்த மாநாட்டில் உலகளாவிய பிரச்சினைகள், பொருளாதார ஒத்துழைப்பு, சுகாதாரம், வர்த்தகம், தொழில்நுட்பம் உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் குறித்து தலைவர்கள் ஆலோசித்தனர்.

we-r-hiring

ஒருமித்த முடிவை உருவாக்கிய இந்தியா

BRICS அமைப்பில் ரஷ்யா, சீனா, ஈரான், சவுதி அரேபியா உள்ளிட்ட பல்வேறு நாடுகள் இடம்பெற்றுள்ள நிலையில், அவற்றின் அரசியல் நிலைப்பாடுகள் பல விவகாரங்களில் வேறுபடுகின்றன. இதுபோன்ற சூழலிலும் இந்தியாவின் தலைமையில் 140 அம்சங்களைக் கொண்ட கூட்டு பிரகடனம் ஏற்றுக்கொள்ளப்பட்டது. இது பிரதமர் மோடியின் முக்கிய ராஜதந்திர சாதனையாக பார்க்கப்படுகிறது.

சீனாவுடன் உறவில் புதிய முன்னேற்றம்

BRICS மாநாட்டின் போது பிரதமர் மோடியும் சீன அதிபர் ஜி ஜின்பிங்கும் சந்தித்து இருதரப்பு உறவுகள் குறித்து பேச்சுவார்த்தை நடத்தினர். வர்த்தகம், போக்குவரத்து இணைப்பு, சந்தை அணுகல் உள்ளிட்ட துறைகளில் ஒத்துழைப்பை அதிகரிப்பது குறித்து இரு தரப்பும் கவனம் செலுத்தின. எல்லையில் அமைதியும் நிலைத்தன்மையும் இரு நாடுகளின் உறவுகளை மேம்படுத்துவதற்கான முக்கிய அடிப்படை என இந்தியா வலியுறுத்தியுள்ளது.

ரஷ்யா மற்றும் ஈரானுடன் சமநிலை

ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினுடனும், ஈரான் அதிபர் மசூத் பெசெஷ்கியானுடனும் இந்தியா தொடர்ந்து நெருக்கமான உறவை வெளிப்படுத்தியது. ஒரே நேரத்தில் அமெரிக்கா மற்றும் மேற்கத்திய நாடுகளுடனான இந்தியாவின் உறவுகளையும் கருத்தில் கொண்டு, ரஷ்யா, சீனா, ஈரான் உள்ளிட்ட முக்கிய சக்திகளுடன் சமநிலையான அணுகுமுறையை பிரதமர் மோடி கடைப்பிடித்ததாக சர்வதேச ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

பயங்கரவாதத்திற்கு எதிரான இந்தியாவின் நிலைப்பாடு

BRICS கூட்டு பிரகடனத்தில் பயங்கரவாதத்திற்கு எதிரான நடவடிக்கைகள் மற்றும் சர்வதேச ஒத்துழைப்புக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது. இந்தியாவுக்கு முக்கியமான பாதுகாப்பு விவகாரங்களில் BRICS நாடுகளின் ஒருமித்த ஆதரவை உருவாக்குவது, இந்தியாவின் ராஜதந்திர ரீதியான முக்கிய பலன்களில் ஒன்றாக பார்க்கப்படுகிறது.

வர்த்தகம் மற்றும் உள்ளூர் நாணய பரிவர்த்தனை

BRICS நாடுகளுக்கிடையே எல்லை தாண்டிய பணப்பரிவர்த்தனையை மேம்படுத்துவது மற்றும் உள்ளூர் நாணயங்களை பயன்படுத்தி வர்த்தக பரிவர்த்தனைகளை மேற்கொள்வது தொடர்பான பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. இதன் மூலம் சர்வதேச வர்த்தகத்தில் மாற்று பணப்பரிவர்த்தனை அமைப்புகளை உருவாக்கும் முயற்சி மேலும் வலுப்பெற்றுள்ளது.

இந்தியாவுக்கு முக்கியமான கடல்சார் முயற்சி

கடல்சார் பணியாளர்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக ‘BRICS Seafarers’ Emergency Support Network’ என்ற அவசரகால ஆதரவு வலையமைப்பை உருவாக்க பிரதமர் மோடி முன்மொழிந்தார். உலகின் பயிற்சி பெற்ற கடல்சார் பணியாளர்களில் இந்தியாவின் பங்கு குறிப்பிடத்தக்கதாக இருப்பதால், இந்த முயற்சி இந்தியாவுக்கு முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

சுகாதாரம், உணவு மற்றும் தொழில்நுட்ப ஒத்துழைப்பு

தொற்றுநோய்களை முன்கூட்டியே கண்டறிந்து எதிர்கொள்ள BRICS Integrated Early Warning System உருவாக்குவது, வேளாண்மை மற்றும் டிஜிட்டல் விவசாயத்தில் ஒத்துழைப்பை அதிகரிப்பது, உணவுப் பாதுகாப்பு, செயற்கை நுண்ணறிவு மற்றும் காலநிலை மாற்றம் போன்ற துறைகளில் இணைந்து செயல்படுவது உள்ளிட்ட பல முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன.

உலக தெற்கின் குரலை வலுப்படுத்தும் இந்தியா

BRICS அமைப்பை உலக தெற்கு நாடுகளின் குரலை வலுப்படுத்தும் முக்கிய தளமாக இந்தியா முன்னிறுத்தியுள்ளது. உலகளாவிய நிர்வாக அமைப்புகளில் வளர்ந்து வரும் நாடுகளுக்கு அதிக பிரதிநிதித்துவம் வேண்டும் என்ற இந்தியாவின் நீண்டகால நிலைப்பாட்டுக்கும் இந்த மாநாடு வலுசேர்த்துள்ளது.

இதனால், BRICS மாநாட்டை வெறும் சர்வதேச மாநாடாக மட்டுமின்றி, பல்வேறு வல்லரசுகளுக்கு இடையே சமநிலையை பேணியபடி இந்தியாவின் ராஜதந்திர செல்வாக்கை வெளிப்படுத்திய முக்கிய நிகழ்வாகவும் பார்க்கப்படுகிறது. மாநாட்டின் தலைமைப் பொறுப்பை 2027-ம் ஆண்டுக்காக சீனா ஏற்றுக்கொண்டுள்ளது.

பிரதமர் மோடியின் பிறந்தநாளில் ஆசீர்வாத தீபம்! மாலை 6 முதல் 7 மணி வரை வீடுகளில் ஏற்ற நிதின் நபின் வேண்டுகோள்!

MUST READ