Homeசெய்திகள்இந்தியாகோவை - பெங்களூரு இடையே கூடுதல் விமான சேவை! தினமும் 2 புதிய விமானங்கள் –...

கோவை – பெங்களூரு இடையே கூடுதல் விமான சேவை! தினமும் 2 புதிய விமானங்கள் – அக்டோபர் 25 முதல் இயக்கம்

-

- Advertisement -

கோவை – பெங்களூரு இடையே கூடுதலாக தினசரி 2 விமான சேவைகளை அறிமுகப்படுத்த ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் நிறுவனம் முடிவு செய்துள்ளது. இந்த புதிய சேவை முதல்கட்டமாக அக்டோபர் 25-ம் தேதி முதல் தொடங்கும் என்றும், நவம்பர் 1-ம் தேதி முதல் முழுமையாக இயக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

we-r-hiring

கோவை – பெங்களூரு இடையே 2 புதிய சேவைகள்

தற்போது கோவை விமான நிலையத்தில் இருந்து சென்னை, பெங்களூரு, புதுடெல்லி, மும்பை உள்ளிட்ட உள்நாட்டு நகரங்களுக்கும், சார்ஜா, அபுதாபி, துபாய் உள்ளிட்ட சர்வதேச நகரங்களுக்கும் விமான சேவைகள் இயக்கப்பட்டு வருகின்றன. தினமும் சுமார் 28 விமானங்கள் கோவையில் இருந்து இயக்கப்படுகின்றன.

இந்த நிலையில், ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் நிறுவனம் கோவை – பெங்களூரு இடையே தினமும் 2 முறை புதிய விமான சேவையை அறிமுகப்படுத்த உள்ளது.

புதிய விமானங்களின் நேரம்

கோவையில் இருந்து காலை 9.10 மணிக்கு புறப்படும் விமானம் காலை 10.05 மணிக்கு பெங்களூரு சென்றடையும். இரவு 9.50 மணிக்கு கோவையில் இருந்து புறப்படும் மற்றொரு விமானம் இரவு 10.45 மணிக்கு பெங்களூரு சென்றடையும்.

மறுமார்க்கமாக, பெங்களூருவில் இருந்து காலை 7.20 மணிக்கு புறப்படும் விமானம் காலை 8.25 மணிக்கு கோவை வந்தடையும். இரவு 7.10 மணிக்கு பெங்களூருவில் இருந்து புறப்படும் விமானம் இரவு 8.15 மணிக்கு கோவை வந்தடையும்.

அக்டோபர் 25 முதல் தொடக்கம்

இந்த புதிய விமான சேவை முதல்கட்டமாக அக்டோபர் 25-ம் தேதி முதல் தொடங்கும். அதன்பின்னர் நவம்பர் 1-ம் தேதி முதல் முழுமையான சேவையாக இயக்கப்படும் என ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.

தினசரி 5 விமான சேவைகள்

புதிய சேவை தொடங்கிய பிறகு, இண்டிகோ மற்றும் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் ஆகிய நிறுவனங்கள் இணைந்து கோவை – பெங்களூரு இடையே தினமும் இயக்கும் விமானங்களின் எண்ணிக்கை 5 ஆக உயரும்.

இந்த கூடுதல் இணைப்பு தகவல் தொழில்நுட்பம் மற்றும் மென்பொருள் துறையினர், வணிகப் பயணிகள் மற்றும் சர்வதேச பயணிகளுக்கு பயனுள்ளதாக இருக்கும் என கோவை தொழில்துறையினர் தெரிவித்துள்ளனர். குறிப்பாக பெங்களூரு வழியாக லண்டன் உள்ளிட்ட சர்வதேச நகரங்களுக்கு பயணிக்க இந்த இணைப்பு வசதியாக அமையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

செமிகண்டக்டர் துறையில் ரூ.1 லட்சம் கோடி முதலீடு! – மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தகவல்

MUST READ