Homeசெய்திகள்இந்தியாஇந்தியாவின் முதல் டெங்கு தடுப்பூசி ‘கியூடெங்கா’! டாக்டர் ரெட்டீஸுக்கு விநியோக உரிமை – 2027-ல் விற்பனைக்கு...

இந்தியாவின் முதல் டெங்கு தடுப்பூசி ‘கியூடெங்கா’! டாக்டர் ரெட்டீஸுக்கு விநியோக உரிமை – 2027-ல் விற்பனைக்கு வரும்

-

- Advertisement -

இந்தியாவின் முதல் அங்கீகரிக்கப்பட்ட டெங்கு தடுப்பூசியான ‘கியூடெங்கா’வை இந்தியாவில் தனியார் சந்தையில் சந்தைப்படுத்தி விநியோகிக்க டாக்டர் ரெட்டீஸ் லேபரட்டரீஸ் நிறுவனத்துக்கு பிரத்யேக உரிமை வழங்கப்பட்டுள்ளது.

we-r-hiring

ஜப்பானைச் சேர்ந்த டாகேடா பார்மாசூட்டிகல்ஸ் நிறுவனமும் டாக்டர் ரெட்டீஸ் லேபரட்டரீஸும் இதற்கான பிரத்யேக ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளன. இதன்படி, இந்தியாவின் தனியார் சந்தையில் சிறுவர்கள் மற்றும் பெரியவர்களுக்கான கியூடெங்கா தடுப்பூசியை விளம்பரப்படுத்துதல் மற்றும் விநியோகிக்கும் பணிகளை டாக்டர் ரெட்டீஸ் மேற்கொள்ளும்.

2027-ல் விற்பனைக்கு வரும்

கியூடெங்கா தடுப்பூசி இந்திய தனியார் சந்தையில் 2027-ம் ஆண்டின் முதல் பாதியில் விற்பனைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. எனினும், உள்ளூர் ஒழுங்குமுறை நடைமுறைகள் நிறைவடைந்த பிறகே இதன் விற்பனை தொடங்கும். தடுப்பூசியின் இந்திய விலை இதுவரை நிர்ணயிக்கப்படவில்லை.

4 முதல் 60 வயது வரை பயன்படுத்த அனுமதி

மத்திய மருந்துகள் தரக் கட்டுப்பாட்டு அமைப்பான CDSCO, கடந்த ஜூலை மாதம் 4 முதல் 60 வயது வரையிலான நபர்களுக்கு கியூடெங்கா தடுப்பூசியைப் பயன்படுத்துவதற்கான சந்தைப்படுத்தல் அனுமதியை வழங்கியது. இதன் மூலம் இந்தியாவில் அங்கீகரிக்கப்பட்ட முதல் டெங்கு தடுப்பூசி என்ற நிலையை கியூடெங்கா பெற்றது.

4 வகை டெங்கு வைரஸ்களுக்கு எதிரான தடுப்பூசி

கியூடெங்கா என்பது நான்கு வகையான டெங்கு வைரஸ் செரோடைப்களுக்கும் எதிராக நோய் எதிர்ப்பு பாதுகாப்பை உருவாக்கும் வகையில் உருவாக்கப்பட்ட உயிரிழக்கச் செய்யப்படாத (live-attenuated), நான்கு வகை டெங்கு தடுப்பூசியாகும். இது இரண்டு தவணைகளாக வழங்கப்படுகிறது; இரண்டு தவணைகளுக்கும் இடையே 3 மாத இடைவெளி இருக்கும்.

பொது தடுப்பூசி திட்டத்தில் சேர்ப்பது நீண்டகால இலக்கு

தற்போதைய ஒப்பந்தம் இந்தியாவின் தனியார் சந்தையை மையமாகக் கொண்டது. டாகேடா நிறுவனம் இந்தியாவின் பொதுச் சந்தைக்கான உரிமைகளைத் தொடர்ந்து வைத்திருக்கும். எதிர்காலத்தில் கியூடெங்காவை இந்தியாவின் பொதுத் தடுப்பூசி திட்டத்தில் சேர்ப்பது நீண்டகால இலக்காக இருப்பதாக டாகேடா தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே, உலகளவில் கியூடெங்கா 43 நாடுகளில் அங்கீகரிக்கப்பட்டுள்ளதாகவும், 3.2 கோடிக்கும் அதிகமான டோஸ்கள் விநியோகிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பெட்ரோல் பங்குகளில் இனி யுபிஐ கிடையாது? மத்தியப்பிரதேசத்தில் வெடிக்கும் புதிய சர்ச்சை! முழு விவரம் இதோ!

MUST READ