Homeசெய்திகள்தமிழ்நாடு"தவெக ஆட்சி சர்ச்சை மற்றும் தடுமாற்றத்தின் உச்சத்தில் உள்ளது": முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் ஆவேசம்!

“தவெக ஆட்சி சர்ச்சை மற்றும் தடுமாற்றத்தின் உச்சத்தில் உள்ளது”: முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் ஆவேசம்!

-

- Advertisement -

தமிழகத்தில் தவெக ஆட்சி அமைந்து நான்கு மாதங்கள் கடந்த நிலையிலும், மக்கள் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதை விடுத்து, பிரச்சினைகளைத் திசை திருப்புவதிலேயே அரசு குறியாக இருப்பதாக முன்னாள் அமைச்சரும் அதிமுகவின் மூத்த தலைவருமான ஆர்.பி. உதயகுமார் கடுமையாகச் சாடியுள்ளார். மேலும், வரவிருக்கும் தாராபுரம் மற்றும் மதுராந்தகம் இடைத்தேர்தல்களில் நடிகர் விஜய்யின் ‘மாஸ்’ எடுபடாது என்றும், எடப்பாடியாரின் கை ஓங்கும் என்றும் அவர் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்."தவெக ஆட்சி சர்ச்சை மற்றும் தடுமாற்றத்தின் உச்சத்தில் உள்ளது": முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் ஆவேசம்!

தடுமாற்றத்தில் தவெக ஆட்சி: ஆர்.பி. உதயகுமார் குற்றச்சாட்டு
மதுரையில் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார், தற்போதைய தவெக அரசின் செயல்பாடுகள் குறித்து அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை முன்வைத்தார். அவர் கூறியதாவது, மாநிலத்தில் ஒவ்வொரு நாளும் கொலைச் சம்பவங்கள், பாலியல் வன்கொடுமைகள், படுகொலைகள், போதைப்பொருள் கடத்தல் மற்றும் லாக்கப் மரணங்கள் போன்ற கடுமையான சட்ட ஒழுங்குப் பிரச்சனைகள் அரங்கேறி வருகின்றன. இவற்றுக்குத் தீர்வு காண்பதை விட்டுவிட்டு, தவெக நிர்வாகிகளின் ‘ரீல்ஸ்’ சர்ச்சைகளால் தமிழக மக்கள் விரக்தியின் விளிம்பில் தள்ளப்பட்டுள்ளனர்."தவெக ஆட்சி சர்ச்சை மற்றும் தடுமாற்றத்தின் உச்சத்தில் உள்ளது": முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் ஆவேசம்!

we-r-hiring

முதல்வர் விஜய் மேட்டூர் அணையின் மதகைத் திறக்கச் சென்றபோது பாதுகாப்பு மற்றும் பயண ஏற்பாடுகளுக்காக மட்டுமே ரூ.6 கோடி செலவிடப்பட்டுள்ளதாகவும், ஆனால் அந்த அணை கட்டப்பட்டதே ரூ.5 கோடி செலவில்தான் என்றும் கூறிவரும் தகவல்கள் மக்களிடையே மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன. மேலும், இந்தியாவில் ஏற்கனவே வெற்றிகரமாகச் செயல்பட்டு வரும் ‘மதர்சன்’ குழுமத்துடன் ஒப்பந்தம் செய்ய எதற்கு அரசுப் பணத்தில் லண்டன் பயணம் செல்ல வேண்டும் என்ற கேள்விக்கு முதல்வர் இதுவரை எந்த பதிலும் அளிக்கவில்லை என்றார்.

மௌனம் காக்கும் அரசும் தொடரும் சர்ச்சைகளும்
தொடர்ந்து பேசிய அவர், மாநிலத்தின் பல பகுதிகளில் அறிவிக்கப்படாத மின்வெட்டு நிலவி வருவதைச் சுட்டிக்காட்டினார். மின்வெட்டுக்குத் தீர்வு காண்பதை விட்டுவிட்டு, பஞ்சாபிலும் 12 மணி நேரம் மின்வெட்டு எனக் கூறி அமைச்சர் நிர்மல்குமார் தப்பியோடப் பார்ப்பது மிகப்பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது என்றார். சென்னை பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமைச் செயலகம் அமைப்பது தொடர்பாக எந்தவிதக் கலந்துரையாடலும் செய்யாமல் அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. இதனால் அந்தப் பகுதி மக்கள் கடும் எதிர்ப்பைத் தெரிவித்து வரும் நிலையில், முதல்வர் இதுகுறித்து மௌனம் காத்து வருகிறார். கடந்த நான்கு மாத கால ஆட்சியில் மட்டும் சுமார் ரூ.40,000 கோடி கடன் பெறப்பட்டு, தவெக அரசு தட்டுத்தடுமாறி வருவதாகவும் அவர் குற்றம் சாட்டினார்."தவெக ஆட்சி சர்ச்சை மற்றும் தடுமாற்றத்தின் உச்சத்தில் உள்ளது": முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் ஆவேசம்!

“இடைத்தேர்தலில் விஜய்க்கு மாஸ் இல்லை; எடப்பாடியாருக்குத்தான் மாஸ்!”
வரவிருக்கும் இடைத்தேர்தல்கள் குறித்துப் பேசிய ஆர்.பி. உதயகுமார், “தாராபுரம் மற்றும் மதுராந்தகத்தில் நடைபெறுகிற இடைத்தேர்தல் ஜனநாயகத்தைக் காப்பாற்றுகின்ற மிக முக்கியமான தேர்தலாகும். தவெகவில் வேட்பாளர்களாக நிற்பவர்கள் செய்த துரோகங்களுக்கு மக்கள் இந்தத் தேர்தலில் உரிய பாடம் புகட்டுவார்கள். தவெகவின் ஆட்சித் துரோகங்களை எதிர்க்கும் வகையில் மக்கள் தயாராகிவிட்டனர். இடைத்தேர்தல் களம் எடப்பாடியாரின் கரங்களை வலுப்படுத்தும் விதமாக அமையும். தவெக தரப்பில் விஜய்யின் ‘மாஸ்’ எல்லாம் இங்கு எடுபடாது; எடப்பாடியாருக்குத்தான் உண்மையான மக்கள் ‘மாஸ்’ உள்ளது என்பதை வாக்காளர்கள் இடைத்தேர்தல் தீர்ப்பு மூலம் நிரூபிப்பார்கள்” என ஆவேசமாகத் தெரிவித்தார்.

MUST READ