Homeசெய்திகள்அரசியல்தாராபுரம் இடைத்தேர்தல்: ஒரே நேரத்தில் திமுக - தவெக தீவிர பிரசாரம்; பகுதியில் பரபரப்பு

தாராபுரம் இடைத்தேர்தல்: ஒரே நேரத்தில் திமுக – தவெக தீவிர பிரசாரம்; பகுதியில் பரபரப்பு

-

- Advertisement -

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் (தனி) சட்டமன்ற தொகுதியில் இடைத்தேர்தல் பிரசாரம் தீவிரமடைந்துள்ளது. அக்டோபர் 6-ஆம் தேதி நடைபெற உள்ள இந்த இடைத்தேர்தலில் திமுக, தவெக உள்ளிட்ட 5 கட்சிகளுக்கு இடையே போட்டி நிலவுகிறது.

we-r-hiring

தவெக வேட்பாளருக்கு ஆதரவாக சைக்கிளில் பிரசாரம்

தவெக வேட்பாளர் சத்யபாமாவை ஆதரித்து அமைச்சர்கள் ஆனந்த், பர்வேஸ் மற்றும் அருண்ராஜ் ஆகியோர் தாராபுரம் பகுதிகளில் சைக்கிளில் சென்று வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர். துண்டு பிரசுரங்களை வழங்கியும் பொதுமக்களிடம் ஆதரவு கோரியும் பிரசாரம் மேற்கொண்டனர்.

திமுக சார்பில் வாக்கு சேகரிப்பு

மறுபுறம், திமுக வேட்பாளர் சுகன்யாவை ஆதரித்து முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு தலைமையில் திமுகவினர் பிரசாரத்தில் ஈடுபட்டனர். வீதி வீதியாக சென்று பொதுமக்களிடம் வாக்கு சேகரித்தனர்.

ஒரே இடத்தில் இரு கட்சியினரும் பிரசாரம்

தாராபுரம் மார்க்கெட் ரோட்டில் உள்ள எல்லீஸ் மெமோரியல் தேவாலய வாசல் முன்பு திமுக மற்றும் தவெக கட்சியினர் ஒரே நேரத்தில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர்.

இரு தரப்பினரும் துண்டு பிரசுரங்களை வழங்கி கோஷமிட்டதால் அந்த பகுதியில் பரபரப்பான சூழல் ஏற்பட்டது.

5 முனைப்போட்டி

தாராபுரம் இடைத்தேர்தலில் தவெக, திமுக, அதிமுக, நாம் தமிழர் கட்சி மற்றும் இந்திய கம்யூனிஸ்டு கட்சி என 5 முனைப்போட்டி நிலவுகிறது. இதனால் தேர்தல் பிரசாரம் நாளுக்கு நாள் தீவிரமடைந்து வருகிறது.

தேர்தல் நெருங்கி வரும் நிலையில், முக்கிய கட்சிகளின் தலைவர்கள் மற்றும் நிர்வாகிகள் தாராபுரம் தொகுதியில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

தாராபுரம் இடைத்தேர்தல்: “தவெகவுக்கு ஆதரவளித்த கட்சிகளுக்கு விஜய் சோஃபா டெலிவரி” – குதிரைபேரம் நடந்து கட்சி தாவியதால் வந்த இடைத்தேர்தல் என உதயநிதி விமர்சனம்

MUST READ