spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்சினிமாஇது மிரட்டலா இருக்கே... 'லியோ' படத்தில் விஜயின் அப்பாவாக நடிக்கும் கேஜிஎப் வில்லன்!

இது மிரட்டலா இருக்கே… ‘லியோ’ படத்தில் விஜயின் அப்பாவாக நடிக்கும் கேஜிஎப் வில்லன்!

-

- Advertisement -

கேஜிஎஃப் பட நடிகர் சஞ்சய் தத் ‘லியோ’ படத்தில் விஜய்க்கு அப்பாவாக நடிக்க இருப்பதாகக் கூறப்படுகிறது.

லோகேஷ் கனகராஜ் இயக்கும் ‘லியோ‘ படத்தில் விஜய், திரிஷா, சஞ்சய் தத், அர்ஜுன், மிஸ்கின் உள்ளிட்ட பலர் நடித்து வருகின்றனர். இப்படம் செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ தயாரிப்பிலும் அனிருத் இசையிலும் உருவாகி வருகிறது.

we-r-hiring

நடிகர் விஜய் மாஸ்டர் படத்திற்கு பிறகு இரண்டாவது முறையாக லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடித்து வருகிறார்.
விஜய் கடைசியாக நடித்த பீஸ்ட் மற்றும் வாரிசு ஆகிய படங்கள் பெரிய அளவில் வரவேற்பைப் பெறவில்லை என்பதனால் விஜய் தனது அடுத்த படமான ‘லியோ’ படத்தை வெற்றி படமாக மாற்றும் முயற்சியில் இறங்கியுள்ளார்.

அதே சமயம் கடந்த ஆண்டு லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல் நடித்து வெளிவந்த ‘விக்ரம்‘ திரைப்படம் சூப்பர் ஹிட் ஆனது. இதனைத் தொடர்ந்து லோகேஷ் கனகராஜ் இயக்கி வரும் ‘லியோ’ திரைப்படம் விஜய் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை உள்ளது.

ஒரு மாஸ் கேங்ஸ்டர் படமான இப்படம் வரும் அக்டோபர் 19ஆம் தேதி திரையில் வெளியாக இருக்கும் நிலையில் தற்போது இப்படம் குறித்து சுவாரசியமான தகவல் ஒன்று வெளியாகி உள்ளது.

கேஜிஎப் நடிகர் சஞ்சய் தத் லியோ படத்தில் நடித்து வருவது அனைவருக்கும் தெரியும்.  தற்போது அவரது கதாபாத்திரம் குறித்து முக்கிய அப்டேட் கிடைத்துள்ளது. சஞ்சய் தத் இந்தப் படத்தில் விஜயின் அப்பாவாக நடிக்கிறாராம். மேலும் ஆவர் 1940-களை ச் சார்ந்த கேங்ஸ்டர் ஆக இந்தப் படத்தில் காணப்படுவர் என்று கூறப்படுகிறது. நாளுக்கு நாள் படத்தின் மீதான எதிர்பார்ப்பு எகிறி வருகிறது. சஞ்சய் தத் திரையில் மிரட்டப் போகிறார் என்று உறுதியாகியுள்ளது.

சமீபத்தில் விஜய் சஞ்சய் தத் சேர்ந்து நடிக்கும் காட்சிகள் ஹைதராபாத்தில் படமாக்கப்பட்ட நிலையில் சென்னையிலும் படமாக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

MUST READ