குழந்தைகளின் எதிர்காலத்திற்காக களமிறங்கிய தாய்
கணவனை இழந்த நிலையில், தனது இரண்டு குழந்தைகளின் எதிர்காலத்திற்காக ஊர்க்காவல் படை பணிக்கு விண்ணப்பித்த கவிதா குமாரி, கடினமான சூழலையும் பொருட்படுத்தாமல் உடற்தகுதித் தேர்வில் பங்கேற்ற சம்பவம் பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.

வசதிகள் இல்லாவிட்டாலும் தளராத முயற்சி
ஊர்க்காவல் படை பணிக்கான 1,600 மீட்டர் ஓட்டப்பந்தயத் தேர்வில் பங்கேற்ற கவிதா குமாரியிடம் முறையான விளையாட்டு உடைகள் மற்றும் காலணிகள் இல்லாத சூழல் இருந்துள்ளது. இதனால் சேலை அணிந்தபடியும், வெறும் கால்களுடனும் அவர் ஓட்டப்பந்தயத் தேர்வை எதிர்கொண்டார்.
10 நிமிட இலக்கை 6 நிமிடங்களில் கடந்தார்
1,600 மீட்டர் தூரத்தை 10 நிமிடங்களுக்குள் கடக்க வேண்டும் என நிர்ணயிக்கப்பட்டிருந்த நிலையில், கவிதா குமாரி வெறும் 6 நிமிடங்களிலேயே இலக்கை அடைந்ததாக கூறப்படுகிறது. அவரது வேகமும் தன்னம்பிக்கையும் அங்கு இருந்த பலரது பாராட்டுகளையும் பெற்றுள்ளது.
இரண்டு குழந்தைகளுக்காக போராடும் தாய்
கணவரை இழந்த நிலையில், தனது இரண்டு குழந்தைகளின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு வேலைவாய்ப்பை தேடி வரும் கவிதா குமாரி, தனக்கு ஏற்பட்ட பொருளாதார மற்றும் வாழ்க்கைச் சவால்களை கடந்து இந்தத் தேர்வில் பங்கேற்றுள்ளார்.
சமூக வலைதளங்களில் வைரல்
சேலை அணிந்து, வெறும் கால்களுடன் 1,600 மீட்டர் ஓட்டத்தை நிறைவு செய்த கவிதா குமாரியின் விடாமுயற்சி தொடர்பான காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன. வசதிகள் இல்லாத நிலையிலும் தன்னம்பிக்கையுடன் இலக்கை நோக்கி ஓடிய அவரது முயற்சி பலருக்கும் உத்வேகத்தை ஏற்படுத்தியுள்ளது.
பெங்களூருவில் நடைபாதை ஓரத்தில் திடீரென வெடித்த மின்மாற்றி – இருவர் படுகாயம்
