spot_imgspot_img
Homeசெய்திகள்விளையாட்டுசென்னை சூப்பர் கிங்ஸ் அணி பிளே ஆஃப் சுற்றுக்குத் தகுதி!

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பிளே ஆஃப் சுற்றுக்குத் தகுதி!

-

- Advertisement -

 

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பிளே ஆஃப் சுற்றுக்குத் தகுதி!
Photo: CSK

நடப்பு ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரின் 67வது போட்டி, நேற்று (மே 20) பிற்பகல் 03.30 மணிக்கு டெல்லியில் உள்ள அருண்ஜெட்லி மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியை எதிர்கொண்டது.

we-r-hiring

அவசரச் சட்டத்தின் மூலம் டெல்லி அரசின் அதிகாரம் பறிப்பு!

முதலில் பேட்டிங்கைத் தேர்வு செய்து விளையாடிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட்டுகள் இழப்பிற்கு 223 ரன்களை எடுத்தது. அந்த அணி தரப்பில், ருதுராஜ் கெய்க்வாட் 79 ரன்களையும், கான்வே 87 ரன்களையும் எடுத்துள்ளனர்.

அதைத் தொடர்ந்து, 224 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகள் இழப்பிற்கு 146 ரன்களை மட்டுமே எடுத்தது. இதனால் 77 ரன்கள் வித்தியாசத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி அபார வெற்றி பெற்றது. மேலும், பிளே ஆஃப் சுற்றுக்கு சென்னை அணி தகுதிப் பெற்றுள்ளது. டெல்லி அணி தரப்பில் அதிகபட்சமாக, கேப்டன் டேவிட் வார்னர் 86 ரன்களை எடுத்துள்ளார்.

சித்தராமையா, சிவக்குமாருக்கு பிரதமர் மோடி வாழ்த்து

சென்னை அணி தரப்பில் தீபக் சாஹர் 3 விக்கெட்டுகளையும், துஷார் பாண்டே, ரவீந்திர ஜடேஜா தலா ஒரு விக்கெட்டையும், மஹீஸ் தீக்ஷனா, மதீஷா பத்திரனா தலா 2 விக்கெட்டுகளையும் எடுத்துள்ளனர்.

17 புள்ளிகளுடன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, புள்ளிகள் பட்டியலில் இரண்டாவது இடத்தில் உள்ளது.

MUST READ