Homeசெய்திகள்இந்தியாசித்தராமையா, சிவக்குமாருக்கு பிரதமர் மோடி வாழ்த்து

சித்தராமையா, சிவக்குமாருக்கு பிரதமர் மோடி வாழ்த்து

-

- Advertisement -

சித்தராமையா, சிவக்குமாருக்கு பிரதமர் மோடி வாழ்த்து

கர்நாடக முதலமைச்சர் மற்றும் துணை முதலமைச்சராக பதவியேற்றுள்ள சித்தராமையா மற்றும் டி.கே. சிவக்குமாருக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

ராகுல்

கர்நாடக மாநிலத் தேர்தல் முடிவுகள் வெளிவந்த பிறகு, 5 நாள்கள் இடைவெளிக்குப் பின், காங்கிரஸ் தலைவர்களின் கடும் முயற்சி, ஒருங்கிணைப்புமூலம், மக்கள் விரும்பத்தக்க வகையில் முதலமைச்சராக சித்தராமையாவும், துணை முதலமைச்சராக டி.கே.சிவக்குமாரும் ஒருமன தாக முடிவு செய்யப்பட்டு, இன்று பதவியேற்றுக்கொண்டனர்.

கர்நாடக முதலமைச்சராக பதவியேற்றுள்ள சித்தராமையா, துணை முதலமைச்சராக பதவி ஏற்றுள்ள டி.கே. சிவக்குமார் ஆகியோருக்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் தனது டிவிட்டர் பக்கத்தில், “கர்நாடக முதலமைச்சராக பதவியேற்ற திரு சித்தராமையா ஜி , துணை முதலமைச்சராக பதவியேற்ற திரு டி.கே. சிவகுமார் ஜி அவர்களுக்கு வாழ்த்துகள். பயனுள்ள வகையில் பதவிக்காலம் அமைய எனது வாழ்த்துகள்.” எனக் குறிப்பிட்டுள்ளார்.

MUST READ