
டெல்லியில் மாநில அரசின் அதிகாரங்களைப் பறிக்கும் வகையிலான மத்திய அரசின் அவசரச் சட்டத்திற்கு எதிராக, அந்த மாநில அரசு உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்ய முடிவு செய்துள்ளது.
“ஊழலற்ற, சுதந்திரமான ஆட்சியை காங்கிரஸ் தரும்”- ராகுல் காந்தி பேச்சு!
உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பின் மூலம் அதிகாரிகள் நியமனம் மற்றும் பணியிட மாற்றம் தொடர்பான உரிமைகள் அண்மையில் டெல்லி அரசுக்கு கிடைத்தது. இந்த நிலையில், மத்திய அரசு அவசரச் சட்டம் பிறப்பித்து உத்தரவிட்டதன் மூலம் அந்த உரிமைகள் ரத்துச் செய்யப்பட்டுள்ளது.
இதன்மூலம் டெல்லி அரசில் பணிபுரியும் ஐ.ஏ.எஸ். உள்ளிட்ட அதிகாரிகளை நியமிக்கும் உரிமை, மூன்று நபர்கள் கொண்டக் குழுவுக்கு அளிக்கப்பட்டுள்ளது. இந்த குழுவில், முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால், இரண்டு மத்திய அரசு அதிகாரிகள் ஆகியோர் குழுவின் உறுப்பினர்களாக செயல்படுவார்கள் என்றும், பெரும்பான்மை மூலம் முடிவுகள் எடுக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மத்திய அரசின் பிரதிநிதிகளாக, இந்த குழுவில் உள்ள இரண்டு அதிகாரிகள், மூத்த அதிகாரிகளின் நியமனத்தில் முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலின் முடிவுகளை சுலபமாக நிராகரிக்கலாம். இந்த அவசரச் சட்டம் உச்சநீதிமன்றத் தீர்ப்பையே ரத்துச் செய்வது போல் அமைவதாக, குற்றம்சாட்டியுள்ள ஆம் ஆத்மீ கட்சி, உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யத் திட்டமிட்டுள்ளது.
இதனிடையே, உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து மத்திய சீராய்வு மனு ஒன்றைத் தாக்கல் செய்துள்ளது.
இதற்குதான் பிரதமர் படித்திருக்க வேண்டும்- அரவிந்த் கெஜ்ரிவால்
டெல்லி மாநிலத்தைப் பொறுத்த வரையில், காவல்துறை சட்டம்- ஒழுங்கு, பொது அமைதியை நிலைநாட்டுவது மற்றும் நிலத்தின் பயன்பாடு தொடர்பான முடிவுகளை எடுக்கும் அதிகாரம் மட்டுமே மத்திய அரசுக்கு உள்ளதாகவும், பிற விவகாரங்களில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மாநில அரசே முடிவுகளை எடுக்கலாம் எனவும் கடந்த வாரம் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.