Homeசெய்திகள்சினிமாஜீவாவின் ‘தகப்பன்’ திரைப்படம் டிசம்பரில் வெளியாகிறது – ரிலீஸ் குறித்த அறிவிப்பால் ரசிகர்கள் உற்சாகம்!

ஜீவாவின் ‘தகப்பன்’ திரைப்படம் டிசம்பரில் வெளியாகிறது – ரிலீஸ் குறித்த அறிவிப்பால் ரசிகர்கள் உற்சாகம்!

-

- Advertisement -

நடிகர் ஜீவா நடிப்பில் உருவாகியுள்ள ‘தகப்பன்’ திரைப்படம் வரும் டிசம்பர் மாதம் திரையரங்குகளில் வெளியாகும் எனப் படக்குழு அறிவித்துள்ளது. குடும்ப உறவுகள், குறிப்பாக அப்பா – மகன் பாசத்தை மையமாகக் கொண்டு உருவாகியுள்ள இப்படத்தின் வெளியீட்டை ரசிகர்கள் எதிர்பார்த்து வருகின்றனர்.

we-r-hiring

ஜீவாவுடன் இணைந்த ரஜிஷா விஜயன்

‘கிடா’ திரைப்படத்தின் மூலம் கவனம் பெற்ற இயக்குநர் ரா. வெங்கட் இப்படத்தை இயக்கியுள்ளார். ஜீவாவுக்கு ஜோடியாக ரஜிஷா விஜயன் நடித்துள்ளார். லக்ஷ்மி ராமகிருஷ்ணன் உள்ளிட்டோரும் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

‘கருடன்’, ‘மாமன்’ ஆகிய படங்களைத் தயாரித்த லார்க் ஸ்டூடியோஸ் நிறுவனம் இப்படத்தைத் தயாரித்துள்ளது.

மதுரைப் பின்னணியில் குடும்பக் கதை

மதுரை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளைப் பின்னணியாகக் கொண்டு ‘தகப்பன்’ திரைப்படம் உருவாக்கப்பட்டுள்ளது. அப்பா – மகன் உறவு, குடும்பப் பாசம் மற்றும் மனித உணர்வுகளுக்கு முக்கியத்துவம் அளிக்கும் கதையாக இப்படம் அமைந்துள்ளது.

படத்தின் படப்பிடிப்பு 40 நாள்களில் நிறைவடைந்ததாகப் படக்குழு ஏற்கெனவே அறிவித்திருந்தது. மதுரை மேலூர் பகுதியில் படப்பிடிப்பு நடைபெற்றது.

தொழில்நுட்பக் குழு

இப்படத்திற்கு எம். சுகுமார் ஒளிப்பதிவு செய்துள்ளார். மார்ஷல் ராபின்சன் இசையமைத்துள்ளார். படத்தொகுப்புப் பணிகளை நாகூரன் ராமச்சந்திரன் மேற்கொண்டுள்ளார்.

டிசம்பர் 2026-ல் படம் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், வெளியீட்டுக்கான அடுத்தடுத்த தகவல்களை ரசிகர்கள் எதிர்பார்த்துள்ளனர். குறிப்பிட்ட வெளியீட்டுத் தேதி குறித்த தகவல் அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தப்பட்டால், படத்தின் ரிலீஸ் திட்டம் மேலும் தெளிவாகும்.

படத்தில் தமிழ்நாடு முதலமைச்சராக ஹெச். ராஜா – ‘செய் செய்யாதே’ ரிலீஸ் தேதி அறிவிப்பு

MUST READ