பால் உற்பத்தியை அதிகரிக்கவும், பெண்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தவும் தமிழக அரசு நடவடிக்கை!
தமிழகத்தில் ஊரகப் பகுதிகளில் வசிக்கும் தகுதிவாய்ந்த 10,000 பெண்களுக்கு விலையில்லா கறவை மாடுகள் வழங்கும் திட்டத்திற்காக, 2026–2027ஆம் நிதியாண்டில் ரூ.57 கோடி ஒதுக்கீடு செய்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.

10,000 பெண்களுக்கு கறவை மாடுகள்
ஊரகப் பகுதிகளில் உள்ள பெண்களின் பொருளாதார நிலையை மேம்படுத்தவும், அவர்களுக்கு நிலையான வாழ்வாதாரத்தை உருவாக்கவும் விலையில்லா கறவை மாடுகள் வழங்கும் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இத்திட்டத்தின் கீழ், தகுதிவாய்ந்த 10,000 பெண்கள் பயனடையும் வகையில் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
நாளொன்றுக்கு குறைந்தபட்சம் 8 லிட்டர் பால்
இத்திட்டத்தின் கீழ் வழங்கப்படும் கலப்பினக் கறவை மாடு, நாளொன்றுக்கு குறைந்தபட்சம் 8 லிட்டர் பால் கறக்கும் திறன் கொண்டதாக இருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் பயனாளிகள் பால் உற்பத்தியில் ஈடுபட்டு, அதன் வாயிலாக வருமானம் ஈட்டுவதற்கான வாய்ப்பு ஏற்படும்.
பால் உற்பத்தியை அதிகரிக்கத் திட்டம்
தமிழகத்தில் பால் உற்பத்தியை அதிகரிப்பதுடன், ஊரக மகளிரின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதும் இத்திட்டத்தின் முக்கிய நோக்கங்களாகும். கறவை மாடுகள் மூலம் கிடைக்கும் பாலை விற்பனை செய்வதன் வாயிலாகப் பெண்கள் குடும்ப வருமானத்தை உயர்த்திக்கொள்ள உதவும் வகையில் இத்திட்டம் அமைந்துள்ளது.
ரூ.57 கோடிக்கு அரசு ஒப்புதல்
2026–2027ஆம் நிதியாண்டில் இத்திட்டத்தைச் செயல்படுத்துவதற்காக ரூ.57 கோடிக்கு நிர்வாக மற்றும் நிதி ஒப்புதல் வழங்கி தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
இதன் மூலம் தகுதிவாய்ந்த 10,000 ஊரக மகளிருக்கு விலையில்லா கறவை மாடுகள் வழங்குவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட உள்ளன.
அன்பில் மகேஷ் மீதான நடவடிக்கை அரசியல் பழிவாங்கல்: வழக்கறிஞர் அலிம் புகாரி அதிரடிக் குற்றச்சாட்டு
