Homeசெய்திகள்மாவட்டம்வாணியம்பாடி அருகே வேகமாகச் சென்ற காரின் மேல் அமர்ந்து பயணித்த குரங்கு! வைரலாகும் வீடியோ

வாணியம்பாடி அருகே வேகமாகச் சென்ற காரின் மேல் அமர்ந்து பயணித்த குரங்கு! வைரலாகும் வீடியோ

-

- Advertisement -

திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி அருகே தேசிய நெடுஞ்சாலையில் வேகமாகச் சென்ற காரின் மேல் பகுதியில் குரங்கு ஒன்று அமர்ந்து பயணித்த சம்பவம் வாகன ஓட்டிகளிடையே ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பான வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

we-r-hiring

காரின் மேல் அமர்ந்த குரங்கு

வாணியம்பாடி அடுத்த நெக்குந்தி பகுதியில் உள்ள சுங்கச்சாவடி வழியாக கிருஷ்ணகிரியிலிருந்து வேலூர் நோக்கி கார் ஒன்று சென்றுகொண்டிருந்தது. அப்போது, சிறிய குரங்கு ஒன்று திடீரென காரின் மேல் பகுதியில் ஏறி அமர்ந்துகொண்டதாகக் கூறப்படுகிறது.

காரின் பின்னால் பெரிய கன்டெய்னர் லாரி உள்ளிட்ட கனரக வாகனங்கள் வந்துகொண்டிருந்தபோதும், அந்தக் குரங்கு அச்சமின்றி காரின் மேல் அமர்ந்தபடியே பயணித்தது.

வீடியோ எடுத்த வாகன ஓட்டிகள்

காரின் மேல் குரங்கு அமர்ந்திருப்பதைக் கண்ட சக வாகன ஓட்டிகள் வியப்படைந்தனர். சிலர் தங்களது செல்போன்களில் இந்த வினோதக் காட்சியை வீடியோவாகப் பதிவு செய்தனர்.

இதற்கிடையே, சுங்கச்சாவடியைக் கடந்து சென்றபோது காரின் மேல் குரங்கு இருப்பதைப் பார்த்த வாகன ஓட்டிகளும் அங்கிருந்தவர்களும் ஆச்சரியத்துடன் காரைப் பார்த்தனர்.

பின்னர் காரை நிறுத்திப் பார்த்த ஓட்டுநருக்கு, அதன் மேல் பகுதியில் குரங்கு அமர்ந்திருப்பது தெரியவந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது.

சமூக வலைதளங்களில் வைரல்

தேசிய நெடுஞ்சாலையில் வேகமாகச் சென்ற காரின் மேல் குரங்கு அமர்ந்து பயணித்த இந்த வினோதச் சம்பவம், பார்ப்பவர்களை வியப்பில் ஆழ்த்தியுள்ளது. இது தொடர்பான காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவி வருகின்றன.

வாகனங்கள் அதிக வேகத்தில் செல்லும் சாலைகளில் இதுபோன்ற சம்பவங்கள் விலங்குகளுக்கும் வாகன ஓட்டிகளுக்கும் ஆபத்தை ஏற்படுத்தக்கூடும் என்பதால், வாகன ஓட்டிகள் எச்சரிக்கையுடன் செயல்படுவது அவசியமாகும்.

வாணியம்பாடியில் சாலையில் கொட்டிக் கிடந்த ரசாயனத்தை அகற்றக் கோரி சாலை மறியல்!

MUST READ