Homeசெய்திகள்தமிழ்நாடுரூ.3,000 கோடி போதைப்பொருள் கடத்தல்: சர்வதேச மாஃபியா கும்பலுடன் தவெக முன்னாள் பிரமுகர் பூபாலனுக்கு தொடர்பு?...

ரூ.3,000 கோடி போதைப்பொருள் கடத்தல்: சர்வதேச மாஃபியா கும்பலுடன் தவெக முன்னாள் பிரமுகர் பூபாலனுக்கு தொடர்பு? – பேரதிர்ச்சித் தகவல்கள்!

-

- Advertisement -

ரூ.3,000 கோடி போதைப்பொருள் கடத்தல்: சர்வதேச மாஃபியா கும்பலுடன் தவெக முன்னாள் பிரமுகர் பூபாலனுக்கு தொடர்பு? – பேரதிர்ச்சித் தகவல்கள்!

தமிழகக் கடலோரப் பகுதிகள் சர்வதேச போதைப்பொருள் கடத்தல் மாஃபியாக்களின் பிரதான கூடாரமாக மாறி வருகிறதா என்ற அச்சுறுத்தும் கேள்வி தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது. ஈரான் மற்றும் பாகிஸ்தான் எல்லைகளில் இருந்து கடத்தப்பட்ட பல ஆயிரம் கோடி மதிப்பிலான போதைப்பொருள்களுக்கும், தமிழகத்தைச் சேர்ந்த முன்னாள் தவெக பிரமுகர் பூபாலனுக்கும் இடையேயான அதிர்ச்சி அளிக்கும் தொடர்புகள் குறித்து மத்திய புலனாய்வு வட்டாரங்கள் தீவிரமாக ஆராய்ந்து வருகின்றன.

we-r-hiring

அரபிக்கடலில் அரங்கேறிய அதிரடி வேட்டை!

கடந்த செப்டம்பர் 25-ஆம் தேதி, குஜராத் பயங்கரவாதத் தடுப்புப் பிரிவு (ATS), மத்திய போதைப்பொருள் கட்டுப்பாட்டுப் பணியகம் (NCB) மற்றும் இந்தியக் கடலோரக் காவல் படை (Coast Guard) ஆகியவை இணைந்து அரபிக்கடலில் கூட்டு அதிரடி ஆபரேஷனை நடத்தின.  லட்சத்தீவு மற்றும் மும்பை கடல் பகுதிக்கு அருகில் மடக்கிப் பிடிக்கப்பட்ட ஈரானின் ‘ஆசாத்’ படகில் நடத்தப்பட்ட சோதனையில், சுமார் 526 கிலோ எடை கொண்ட மிக வீரியமிக்க போதைப்பொருள்கள் கைப்பற்றப்பட்டன.

இதில் 400 கிலோ மெத்தபெட்டமின் மற்றும் 126 கிலோ ஹெராயின் அடங்கும் . இதன் சர்வதேச சந்தை மதிப்பு சுமார் ரூ.3,000 கோடி ஆகும். பிடிபட்ட 5 பாகிஸ்தானியர்களை விசாரித்ததில், இந்த மாபெரும் போதைப்பொருள் கன்சைன்மென்ட் நடுக்கடலில் வைத்து தமிழகப் படகுகளுக்குக் கைமாற்றப்படுவதற்காகக் கொண்டுவரப்பட்டது என்ற பகீர் உண்மை வெளிவந்தது
ரூ.3,000 கோடி போதைப்பொருள் கடத்தல்: சர்வதேச மாஃபியா கும்பலுடன் தவெக முன்னாள் பிரமுகர் பூபாலனுக்கு தொடர்பு? – பேரதிர்ச்சித் தகவல்கள்!

சிக்கியது சர்வதேச வலை! நாகை பூபாலன் கைது!

இந்தச் சர்வதேசக் கடத்தல் நெட்வொர்க்கின் தமிழக முக்கியக் கண்ணியாகச் செயல்பட்டதாகக் கூறப்படும் நாகை வேதாரண்யம் கோடியக்கரை பகுதியைச் சேர்ந்தவரும், தவெக முன்னாள் பொறுப்பாளருமான பூபாலன், மத்திய வருவாய் புலனாய்வு இயக்குநரக (DRI) அதிகாரிகளால் கடந்த அக்டோபர் 16 மற்றும் 17 தேதிகளில் அதிரடியாகக் கைது செய்யப்பட்டார்.

நைஜீரியா, ஈரான், பாகிஸ்தான், இலங்கை மற்றும் தமிழ்நாடு என நீளும் இந்தச் சர்வதேசக் கடத்தல் வழித்தடத்தில்  பூபாலன் ஈடுபட்டுள்ளதுடன், அவரிடமிருந்து கைப்பற்றப்பட்ட மெத்தபெட்டமின் போதைப்பொருள்கள் தமிழகம் வழியாக உள்ளூர் மற்றும் சர்வதேச சந்தைகளுக்கு விநியோகிக்கப்படத் திட்டமிடப்பட்டிருந்தது விசாரணையில் தெரியவந்துள்ளது.

இலங்கைக் கடலில் மிதந்த ரூ.1,500 கோடி போதைப்பொருள்கள்!

பூபாலன் கைதாகிச் சரியாக ஒரு வாரம் கடந்த நிலையில், அக்டோபர் 24-ஆம் தேதி இலங்கையின் தென்பகுதி கடல் பரப்பில் சாக்கு மூட்டைகளிலும் பைகளிலும் மிதந்த 561 கிலோ போதைப்பொருள்களை இலங்கைக் கடலோரக் காவல் படை பறிமுதல் செய்தது.

இதில் 240 கிலோ மெத்தபெட்டமின் மற்றும் 320 கிலோ ஹெராயின் இருந்ததாகவும், இதன் மதிப்பு ரூ.1,500 கோடி வரை இருக்கும் என்றும் மதிப்பிடப்பட்டுள்ளது. அரபிக்கடல் முதல் தமிழகம் மற்றும் இலங்கை வரை ஒரே ரூட்டில் அடுத்தடுத்து சிக்கியுள்ள இந்தத் தொடர் போதைப்பொருள் கடத்தல்கள் தெற்காசிய நாடுகளையே உலுக்கியுள்ளன.

பின்னணியில் யார் அந்தப் பெரிய தலைகள்?

பலாயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான இந்தச் சிந்தெட்டிக் போதைப்பொருள்களைக் கடத்துவதற்குப் பின்னால் குறைந்தபட்சம் 100 கோடி ரூபாய்க்கும் அதிகமான முதலீடுகள் செய்யப்பட்டிருக்க வேண்டும் என்பதால் , கிரிப்டோகரன்சி மற்றும் ஹவாலா முறைகளைப் பயன்படுத்தி நிதிப் பரிமாற்றங்கள் நடந்துள்ளனவா என்பது குறித்தும் , இதன் பின்னணியில் உள்ள பிற செல்வாக்குமிக்க நபர்கள் யார்யார் என்பது குறித்தும் மத்திய புலனாய்வு முகாமைகள் தங்களது இரும்புக்கர கொண்டு விசாரணையைத் தீவிரப்படுத்தியுள்ளன.

மாநிலக் காவல்துறையின் கணக்கிற்கு எட்டாத வண்ணம் மத்திய அமைப்புகளின் நேரடிக் கண்காணிப்பில் இந்த ஆபரேஷன் நடத்தப்பட்டது தமிழக அரசியல் களத்திலும் பெரும் பூகம்பத்தை ஏற்படுத்தியுள்ளது.

MUST READ