நடிகர் சிவகார்த்திகேயன் நடிக்கும் எஸ்கே 27 படம் குறித்த புதிய தகவல் வெளியாகியுள்ளது.
தமிழ் திரையுலகில் தனது கடின உழைப்பாலும் எதார்த்தமான நடிப்பாலும் கோடிக்கணக்கான ரசிகர்களின் இதயங்களை வென்று முன்னணி உச்ச நட்சத்திரமாகத் திகழ்பவர் நடிகர் சிவகார்த்திகேயன். இவர் ஒவ்வொரு திரைப்படத்திலும் வித்தியாசமான கதைகளைத் தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். இவர் தற்போது தனது 27-வது திரைப்படமான ‘எஸ்கே 27’ (SK 27) என்று தற்காலிகமாக தலைப்பு வைக்கப்பட்டுள்ள புதிய படத்தின் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்.
இப்படத்தை பார்க்கிங் படத்தின் மூலம் தமிழ் சினிமா ரசிகர்களைக் கவர்ந்த திறமைமிக்க இளம் இயக்குநரான ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்கி வருகிறார்.
இப்படமானது ரசிகர்களுக்கு மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. மேலும் இதன் படப்பிடிப்பு மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் இந்தச் சூழலில், இயக்குநரின் அர்ப்பணிப்பையும் உழைப்பையும் கண்டு வியந்த சிவகார்த்திகேயன் அவருக்கு ஒரு மறக்க முடியாத சர்ப்ரைஸ் கொடுத்துள்ளார். இயக்குநர் ராம்குமார் பாலகிருஷ்ணனின் சிறப்பான உழைப்பைப் பாராட்டும் விதமாக, அவருக்கு அதிநவீன ‘ஐபோன் 18 புரோ மேக்ஸ்’ (iPhone 18 Pro Max) போனை பரிசளித்து அசத்தியுள்ளார் சிவகார்த்திகேயன். இது தொடர்பான புகைப்படத்தை இயக்குனர் ராம்குமார் பாலகிருஷ்ணன் தனது எக்ஸ் தள பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
Got a loveable surprise from @Siva_Kartikeyan anna ❤️ Thanks for the gift na🫂 Really means a lot! 🙏✨
#SK27 https://t.co/aYmxJwJ443— Ramkumar Balakrishnan (@ImRamkumar_B) November 2, 2026

வழக்கமாக படம் வெளியாகி வெற்றி பெற்ற பிறகே பரிசுகள் வழங்கப்படும் நிலையில், படப்பிடிப்பு நடந்து கொண்டிருக்கும்போதே சிவகார்த்திகேயன் வழங்கிய இந்த அன்புப் பரிசு படக்குழுவினர் அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. அதே சமயம் எஸ்கே 27 படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு நிறைவடைந்து விட்டதாகவும் தகவல் வெளியாகி இருப்பது குறிப்பிடத்தக்கது.
