Homeசெய்திகள்தமிழ்நாடு“கிரிக்கெட் ஸ்கோர் போல ஏறும் கொலை எண்ணிக்கை!” – முதலமைச்சர் விஜய்யை 3 நாட்களாகத் தொடர்புகொள்ள...

“கிரிக்கெட் ஸ்கோர் போல ஏறும் கொலை எண்ணிக்கை!” – முதலமைச்சர் விஜய்யை 3 நாட்களாகத் தொடர்புகொள்ள முடியவில்லை: திமுக வழக்கறிஞர் பரந்தாமன் கடும் விமர்சனம்!

-

- Advertisement -

தமிழகத்தில் கொலைச் சம்பவங்கள் கிரிக்கெட் ஸ்கோர் ஏறுவதைப் போல அதிகரித்து வருவதாகவும், கடந்த மூன்று நாட்களாக தலைமைச் செயலாளர், டிஜிபி உள்ளிட்ட அரசு உயர் அதிகாரிகளால் முதலமைச்சர் விஜய்யைத் தொடர்புகொள்ள முடியவில்லை என்றும் திமுக சட்டத்துறை இணைச் செயலாளர் பரந்தாமன் குற்றம்சாட்டியுள்ளார்.

we-r-hiring

இரண்டு நாட்களில் 17 கொலைகள் – திமுக குற்றச்சாட்டு

சென்னை அண்ணா அறிவாலயத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த பரந்தாமன், தமிழகத்தில் கடந்த இரண்டு நாட்களில் மட்டும் 17 கொலைகள் நடந்துள்ளதாகத் தெரிவித்தார்.

தீபாவளி பண்டிகை நாளிலும் அதற்கு அடுத்த நாளிலும் கொலைகளின் எண்ணிக்கை கிரிக்கெட் ஸ்கோர் ஏறுவதைப் போல அதிகரித்துள்ளதாகக் குறிப்பிட்ட அவர், இத்தனை கொலைச் சம்பவங்கள் குறித்த செய்திகளை முதலமைச்சர் விஜய் படித்தாரா என்றும் கேள்வி எழுப்பினார்.

“முதலமைச்சர் ஸ்லீப் மோடுக்கு சென்றுவிட்டாரா?”

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு முதலமைச்சர் விஜய் ‘ஸ்லீப் மோடு’க்குச் சென்றுவிட்டதாகப் பரந்தாமன் விமர்சித்தார்.

மேலும், கடந்த மூன்று நாட்களாக தலைமைச் செயலாளர், டிஜிபி, காவல் ஆணையர் உள்ளிட்ட அரசு உயர் அதிகாரிகளால் முதலமைச்சர் விஜய்யைத் தொடர்புகொள்ள முடியவில்லை என்றும் அவர் குற்றம்சாட்டினார்.

துணை சபாநாயகர், தவெக எம்.எல்.ஏ. மீது நடவடிக்கை கோரிக்கை

தன்னைச் சந்திக்க வந்த சாதாரண மக்களைத் துணை சபாநாயகர் கண்மூடித்தனமாகத் தாக்குவதாகவும், கள்ளக்குறிச்சி தொகுதி தவெக எம்.எல்.ஏ. மாவட்ட ஆட்சியருக்கு ஆபாசக் குறுஞ்செய்தி அனுப்பியதாகவும் பரந்தாமன் குற்றம் சாட்டினார்.

இந்தச் சம்பவங்கள் தொடர்பாக சம்பந்தப்பட்டவர்கள் மீது உடனடியாகக் குற்றவியல் வழக்குப் பதிவு செய்ய வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

ஒரு பெண் மாவட்ட ஆட்சியரிடம் தவெக எம்.எல்.ஏ. நடந்துகொண்ட விதத்தைப் பார்த்து முதலமைச்சர் வெட்கப்பட வேண்டும் என்றும் கடுமையாக விமர்சித்தார்.

“குரங்கு கையில் கிடைத்த பூமாலை போல தமிழகம்”

தவெக ஆட்சியின் ஆறு மாத காலச் செயல்பாடுகளைக் கடுமையாகச் சாடிய பரந்தாமன், தமிழகத்தின் தற்போதைய நிலைமை குரங்கு கையில் கிடைத்த பூமாலை போல மாறிவிட்டதாக விமர்சித்தார்.

தமிழகத்தில் சட்டம் – ஒழுங்கு நிலைமை குறித்து திமுக தொடர்ந்து கேள்வி எழுப்பி வரும் நிலையில், பரந்தாமனின் இந்தக் குற்றச்சாட்டுகள் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.

குடியாத்தத்தில் பாமக நிர்வாகி நாட்டுத் துப்பாக்கியால் சுட்டுக்கொலை – துப்பாக்கிக் கலாச்சாரத்தைக் கட்டுப்படுத்த அன்புமணி இராமதாஸ் வலியுறுத்தல்!

MUST READ