Homeசெய்திகள்ஆன்மீகம்ராகு பெயர்ச்சியை முன்னிட்டு திருநாகேஸ்வரம் கோயிலில் சிறப்பு வழிபாடு – வெள்ளிக் கவசம் அணிவித்து ராகு...

ராகு பெயர்ச்சியை முன்னிட்டு திருநாகேஸ்வரம் கோயிலில் சிறப்பு வழிபாடு – வெள்ளிக் கவசம் அணிவித்து ராகு பகவானுக்கு தீபாராதனை!

-

- Advertisement -

ஒன்றரை ஆண்டுகளுக்கு ஒருமுறை ஒரு ராசியிலிருந்து மற்றொரு ராசிக்கு இடம் பெயரும் ராகு பகவான், வரும் நவம்பர் 13ஆம் தேதி கும்ப ராசியிலிருந்து மகர ராசிக்கு பெயர்ச்சி அடைவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.ராகு பெயர்ச்சியை முன்னிட்டு திருநாகேஸ்வரம் கோயிலில் சிறப்பு வழிபாடு – வெள்ளிக் கவசம் அணிவித்து ராகு பகவானுக்கு தீபாராதனை!

இதனை முன்னிட்டு கும்பகோணம் அருகே உள்ள புகழ்பெற்ற ராகு பரிகாரத் தலமான திருநாகேஸ்வரம் நாகநாத சுவாமி கோயிலில் சிறப்பு வழிபாடுகள் தொடங்கியுள்ளன.

we-r-hiring

லட்சார்ச்சனை தொடக்கம்

திருநாகேஸ்வரம் நாகநாத சுவாமி கோயிலில் தனி சன்னதி கொண்டுள்ள ராகு பகவானுக்கு ராகு பெயர்ச்சியை முன்னிட்டு இன்று லட்சார்ச்சனை தொடங்கியது. இதன் ஒரு பகுதியாக ராகு பகவானுக்கும், அவரது மனைவியர்களான நாககன்னி மற்றும் நாகவல்லிக்கும் வெள்ளிக் கவசங்கள் அணிவிக்கப்பட்டு சிறப்பு தீபாராதனை நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

நவம்பர் 13ஆம் தேதி ராகு பெயர்ச்சி

ராகு பெயர்ச்சி விழா வரும் நவம்பர் 13ஆம் தேதி மாலை 5.14 மணிக்கு நடைபெற உள்ளது. அப்போது ராகு பகவான் கும்ப ராசியிலிருந்து மகர ராசிக்கு இடம் பெயர்வதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதனை முன்னிட்டு திருநாகேஸ்வரம் கோயிலில் சிறப்பு வழிபாடுகளுக்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

ராகு பெயர்ச்சியையொட்டி தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் பக்தர்கள் திருநாகேஸ்வரம் வந்து வழிபடுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

பழனி முருகன் கோயிலில் காப்பு கட்டுதலுடன் கந்த சஷ்டி விழா தொடக்கம் – நவம்பர் 15-ல் சூரசம்ஹாரம், 16-ல் திருக்கல்யாணம்!

MUST READ