நடிகை பிரியங்கா மோகன் அரசன் படம் குறித்து பேசி உள்ளார்.
இயக்குநர் வெற்றிமாறன் இயக்கத்தில் சிலம்பரசன் நாயகனாக நடித்து வரும் திரைப்படம் ‘அரசன்’. ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இத்திரைப்படத்தில் கதாநாயகியாக நடிக்கும் பிரியங்கா மோகன், சமீபத்தில் விழா மேடை ஒன்றில், அரசன் படம் குறித்தும் தனது கதாபாத்திரம் குறித்தும் நெகிழ்ச்சியுடன் பகிர்ந்துள்ளார்.
அதன்படி அவர், “எனக்கு இயக்குநர் வெற்றிமாறன் சாரை ரொம்பவே பிடிக்கும்; அவருடைய எல்லா படங்களையும் பார்த்திருக்கிறேன். ஆனால், அவருடன் இணைந்து பணியாற்றும் வாய்ப்பு கிடைக்கும் என நான் கனவில் கூட நினைத்துப் பார்த்ததில்லை. ‘அரசன்’ திரைப்படத்தின் ஒரு அங்கமாக இருப்பது எனக்குக் கிடைத்த மிகப்பெரிய விஷயம். அதேபோல், சிலம்பரசன் சாருடன் நான் இணைந்து நடிக்கும் முதல் படமும் இதுதான்.
#PriyankaMohan about #Arasan
– I adore Director #Vetrimaaran sir so much. I have watched all of his films, and I never imagined that I would get a chance to work with him. Being a part of Arasan is a big, big thing for me. This is also the first time I’m working with #SilambarasanTR sir.
– I have worked with many heroes, but being a part of Arasan is truly magical for me. This is the first time I’m speaking in the North Chennai style. I watched some movies and learned how to speak in the North Chennai style for this film. You all are going to see me speaking in the North Chennai style, and I’m sure you are all going to see a different SilambarasanTR. https://t.co/nbkO6DBBqi
— Movie Tamil (@_MovieTamil) November 10, 2026

நான் இதுவரை பல கதாநாயகர்களுடன் நடித்திருக்கிறேன், ஆனால் ‘அரசன்’ படத்தில் நடிப்பது எனக்கு உண்மையிலேயே ஒரு மாயாஜால அனுபவமாக இருக்கிறது. இப்படத்திற்காக முதன்முறையாக வடசென்னை தமிழில் பேச கற்றுக் கொண்டு நடித்துள்ளேன். படத்தில் சிலம்பரசன் சாரையும் ரசிகர்கள் இதுவரை பார்க்காத ஒரு புதிய பரிமாணத்தில் காண்பார்கள்” என்று உற்சாகத்துடன் தெரிவித்துள்ளார். இந்த தகவல் சிம்பு ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சியை தந்துள்ளது.
