இயக்குனர் ஜித்து மாதவன் சீன் படத்தின் சில காட்சிகள் குறித்து பேசி உள்ளார்.
சூர்யா நடிப்பில் பாக்ஸ் ஆபீஸில் மாபெரும் சாதனை படைத்து வரும் ‘சீன்’ திரைப்படத்தை ஜித்து மாதவன் இயக்கியிருந்தார். 2D என்டர்டைன்மெண்ட் நிறுவனமும், லகரம் ஸ்டுடியோஸ் நிறுவனமும் இணைந்து இந்த படத்தை தயாரித்திருக்கிறது. சுசின் ஷியாம் இதற்கு இசையமைத்துள்ளார். நஸ்ரியா, நஸ்லேன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இந்த படம் கடந்த நவம்பர் 6ஆம் தேதி திரையிடப்பட்டு திரையரங்குகளில் வெற்றி நடை போட்டு வருகிறது.
இந்நிலையில் இயக்குனர் ஜித்து மாதவன், இந்த படத்தில் நடிகர் நஸ்லேன் கையில் எப்போதும் வைத்திருக்கும் லாலிபாப் பின்னணி குறித்த சுவாரஸ்யமான ரகசியத்தை சமீபத்திய பேட்டியில் உடைத்துள்ளார். அதன்படி அவர், தனது பேட்டியில் நஸ்லேனின் இந்த அடையாளம் குறித்துப் பேசிய இயக்குநர் ஜித்து மாதவன், “திரைப்படத்தில் நஸ்லேன் லாலிபாப் பயன்படுத்துவது அவருடைய தன்னம்பிக்கையை வெளிப்படுத்துவதற்காகத்தான். தான் ஈடுபடும் ஒவ்வொரு குற்றச் சம்பவத்தின் இடத்திலும் ஒரு லாலிபாப்பை விட்டுச் செல்வதை அவர் வழக்கமாகக் கொண்டிருப்பார். இதற்குப் பின்னால் ஒரு பின்னணிக் காட்சியும் இருந்தது.
Question : #Naslen has a lollipop in his hand. Is it a signature for his character? Is there any backstory behind it?
Dir #JithuMadhavan: There is a #scene explaining that, but we deleted it from the film. If we had kept it, it would have been more relevant to the audience.
Question : Can you tell us about it now?
Dir. Jithu Madhavan: No, it is better that I don’t reveal it.
Q: On #Suriya sir’s birthday, you released a poster and it also had the lollipop…
Dir. Jithu Madhavan: Now I can say it. The reason he uses the lollipop is to show his confidence. At every crime scene, he leaves a mark with his #lollipop. We had an explanation scene for this, but we removed it from the film because I felt it would be overfeeding the audience. So, even though that explanation was removed, he leaves his lollipop mark at every crime scene he is involved in. https://t.co/ZdWeqnND2W
— Movie Tamil (@_MovieTamil) November 11, 2026

ஆனால், ரசிகர்களுக்கு அதிகப்படியான விளக்கங்களைக் கொடுப்பது போல அமைந்துவிடும் என்பதால், அந்த குறிப்பிட்ட காட்சியைப் படத்திலிருந்து நாங்கள் நீக்கிவிட்டோம். அந்த விளக்கக் காட்சி நீக்கப்பட்டிருந்தாலும், அவர் சம்பவம் செய்யும் இடங்களில் தனது அடையாளமாக அந்த லாலிபாப்பை விட்டுச் செல்வது கதையோட்டத்தில் தொடரும் வகையில் அமைக்கப்பட்டிருந்தது” என்று கூறியுள்ளார்.
